வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்குதா?.. செக் பண்ணுறது எப்படி? இதோ முழு விவரம்!
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்துள்ள தேர்தல் ஆணையம், "வாக்காளர் பட்டியலில், நமது பெயர் இருக்கிறதா என்பதை எப்படி பார்ப்பது என்பது குறித்து விளக்கியுள்ளது.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 01 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் ஒன்று என 40 தொகுதிகளுக்கும் முதல் கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது. தேர்தலுக்கு முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த மார்ச் 17 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. 18-வயது பூர்த்தியானவர்கள் உரிய ஆவணங்களை காட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, பலரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருந்தனர். அதுபோக பலருக்கும் சொந்த ஊர்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும். ஆனால், வெளியூரில் வேலை அல்லது தொழில் நிமித்தமாக இருப்பார்கள். இவர்களுக்கும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது என்ற குழப்பம் உள்ளது.
இவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மற்றும் செல்போன் வழியே அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 18-வது லோக்சபா தேர்தலில் வாக்களிக்க 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள், 8,467 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் தகுதி வாய்ந்தவர்கள். தற்போது பட்டியலில் பெயர் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பூத் சிலிப் கிடைக்காதவர்கள், தங்கள் பெயர் லிஸ்டில் இருந்தால், அதை அரசு அங்கீகரித்த அடையாள ஆவணத்தை காட்டி வாக்களிக்க முடியும். வாக்காளர்கள், தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா, தங்கள் ஓட்டுச்சாவடி அமைந்துள்ள இடம் போன்ற விபரங்களை, www.elections. in.gov.in, voters.eci.gov.in ஆகிய வெப்சைட்டிலும், 'voter Helpline' என்ற மொபைல் ஆப் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications