தேர்தல் நாளில் லீவு தராவிட்டால் உங்கள் கம்பெனி மீது புகார் அளிப்பது எப்படி? என்ன நடக்கும்?
சென்னை: தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க சென்னை மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தொழிலாளர் இணை ஆணையர் - 1 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளான வருகிற 19-ந் தேதி விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து புகார் அளிக்க வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என தனித்தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன.

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதன் விவரம் வருமாறு:-
வடசென்னை - தொழிலாளர் துணை ஆய்வாளர் சி.விஜயலட்சுமி - 9840829835, தென் சென்னை - தொழிலாளர் துணை ஆய்வாளர் இ.ஏகாம்பரம் - 9790930846, மத்திய சென்னை - தொழிலாளர் துணை ஆய்வாளர் வேதநாயகி - 9884264814. மேலும், சென்னை மாவட்டம் முழுமைக்கும் 044-24330354 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வாரம் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் , " மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ், தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் உள்ள பொதுத் துறை, தொழில்,வர்த்தகம், உணவு, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் போக்குவரத்து, பீடி, சுருட்டு மற்றும் தோட்ட நிறுவனங்கள், அனைத்து கடைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக ஏப்.19-ம்தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்புவழங்கப்பட வேண்டும்.
கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை வழங்கப்பட வேண்டும். அந்த விடுமுறை நாளுக்கான ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கு ஏற்ப அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
இவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள், தொழிலாளர்கள் புகார் அளிக்க தொழிலாளர் நலத்துறை சார்பில் மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மாநில ஒருங்கிணைப்பாளரான தொழிலாளர் இணை ஆணையர் விமலநாதன் (9445398801, 044-24335107),தொழிலாளர் உதவி ஆணையர்களான வெங்கடாச்சலபதி - சென்னை முதல் வட்டம் (7010275131, 044-24330354), சுபாஷ் சந்திரன் - இரண்டாம் வட்டம் (8220613777, 044-24322749), சிவக்குமார் - மூன்றாம் வட்டம் (9043555123, 044-24322750) ஆகியோரைதொடர்பு கொண்டுபுகார் அளிக்கலாம். இவ்வாறு கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications