இதுவெல்லாம் கட்டாயம்! விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது எப்படி? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை: விநாயகர் சதுர்த்தி தினத்தில் பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலும் தற்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் என்பது கோலாகலமாகி உள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்து நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டைபோல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பிளாஸ்டர் ஆப் பாரீஸ் உள்பட ரசாயனங்கள் இன்றி களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கி பூஜை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்துவதால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது. இதனால் அதனை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அறிவுறுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி களிமண்ணால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளில் ஆபரணங்கள் தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோலை பயன்படுத்தி இருக்க வேண்டும். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் பிசின்களை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல்களை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாறாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகள் தயாரிப்பு, பந்தல் அலங்கரிப்புக்கு வைக்கோல் உள்ளிட்ட பொருளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது. அதோடு மாவட்ட நிர்வாகங்களால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications