Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"SIR"..உங்கள் வாக்குரிமையை சரிபார்க்க வீட்டுக்கு வரும் ஊழியர் யார்? இதோ செல்போன் எண்..உடனே பேசுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடங்கி உள்ளது. ஒவ்வொருவரின் வீட்டுக்கும் பிஎல்ஓ-க்கள் எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வந்து விண்ணப்பம் தருவார். அதனை பூர்த்தியிட்டு நாம் வழங்க வேண்டும். அப்போது தான் ஓட்டுரிமை காப்பாற்றப்படும். இல்லாவிட்டால் ஓட்டுப்போடும் உரிமையை இழக்க நேரிடும். இதனால் பலருக்கும் பயம் வந்துள்ளது. பிஎல்ஓக்கள் வரும்போது வீட்டில் இல்லாவிட்டால் என்ன செய்வது? சொந்த ஊரை விட்டு வெளியூரில் வசிக்கிறோமே? நாம் என்ன செய்வது? என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்து உள்ளது. இந்நிலையில் தான் பிஎல்ஓக்களின் செல்போன் எண்ணை அறிந்து அவர்கள் வருவதை முன்கூட்டியே எளிதாக அறிந்து கொள்ள முடியும். அது எப்படி? என்று இங்கு விரிவாக பார்ப்போம்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR or Special Intensive Revision) கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கி உள்ளது. இது டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Sir tamil nadu election commission

தற்போது தேர்தல் நடக்கும் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கையின் மூலமாக பல லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு தடை கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணியில் சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலின்போது Special Summary Revision (SSR) என்ற பெயரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

அப்போது வெறுமனே பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்டவை தான் செய்ய முடியும். ஆனால் இப்போது மேற்கொள்ளப்படும் ‛சார்' நடவடிக்கை என்பது வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து பலமுறை ஓட்டளித்து இருந்தாலும் கூட அவர்களும் தங்களின் வாக்குரிமையை காப்பாற்றி கொள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். தேவைப்பட்டால் உரிய ஆவணங்களை வழங்க வேண்டும்.

2003க்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் இணைந்தோர், தங்களின் பிறந்த தேதி, வசிப்பிடத்துக்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். கூடவே பெற்றோர்களில் இருவர் அல்லது ஏதேனும் ஒருவரின் அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை இணைத்து படிவங்களை சமர்ப்பித்தால் ஓட்டுரிமை அப்படியே இருக்கும். இல்லாவிட்டால் ஓட்டுரிமை ரத்தாகும்.

அதாவது 2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இடம்பெற்றிருந்தால், அவர் கூடுதல் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆனால், அதற்குப் பிறகு சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்க வேண்டும். இதனால் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கப்படும்நிலை உருவாகி உள்ளது. இதனால் தான் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

இதை செய்யாவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். இதனால் தான் இந்த முறையை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது.

தேர்தல் ஆணையமோ தரப்பில், ‛சார்' என்பதன் நோக்கம் தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் நோக்கமாக கொண்டது. இதனால் அவசியம் என்று நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

குழப்பத்தில் வாக்காளர்கள்

தற்போது பிஎல்ஓக்கள் எனும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக விண்ணப்ப படிவத்தை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பற்றி பலரும் கவலை கொண்டுள்ளனர். எங்கே நமது ஓட்டுரிமை போய் விடுமோ? வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் உள்ள ஊழியர் நம் வீட்டை விட்டு விடுவாரோ?, ஒருவேளை அந்த ஊழியர் வரும்போது நாம் வீட்டில் இல்லாவிட்டால் என்ன செய்வது? என்று பல்வேறு கேள்விகளுடன் குழப்பத்தில் உள்ளனர்.

அதாவது தற்போது பலரும் சொந்த ஊர் விட்டுவிட்டு சென்னை, பெங்களூர் உள்பட பிற நகரங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களின் ஓட்டுரிமையை வசிக்கும் இடங்களுக்கு மாற்றாமல் சொந்த ஊரிலேயே வைத்திருக்கலாம். இப்படியானவர்களுக்கு எங்கே தங்களின் வாக்குரிமையை இழந்து விடுவோமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிஎல்ஓக்களை தொடர்பு கொள்வது எப்படி?

இத்தகைய குழப்பங்கள் கொண்டவர்களுக்கு இனி கவலை வேண்டாம். ஏனென்றால் சொந்தஊரில் உள்ள குடும்பத்தினர் பிஎல்ஓக்களிடம் இருந்து படிவங்களை வாங்கி கொள்ளலாம். மொத்தமாக வெளியூரில் இருப்பவர்கள் என்றால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் ஈடுபடும் ஊழியரை கண்டுபிடித்து நேரடியாக பேசலாம்.

இதன்மூலம் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த அலுவலர் எப்போது வீட்டுக்கு வந்து விண்ணப்பம் தருவார்? என்பதை கேட்டு அறிந்து கொள்ளலாம். வெளியூரில் இருப்பின் ஊருக்கு வந்து அவரை தொடர்பு கொண்டு அந்த படிவத்தை பெறலாம்.

இணையதளம் இதுதான்

அதற்கு ஒவ்வொருவரும் முதலில் https://www.erolls.tn.gov.in/blo/ இந்த இணையதளம் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தின் முகப்பு பகுதியில் மாவட்டம் என்பதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஓட்டுரிமை உள்ள மாவட்டத்தின் பெயரையும், தொகுதி என்பதில் ஓட்டுரிமை உள்ள சட்டசபை தொகுதியையும் தேர்வு செய்து ‛சப்மிட்' செய்ய வேண்டும்.

அடுத்த சில வினாடிகளில் நம் தொகுதியில் வாக்குச்சாவடி வாரியாக பிஎல்ஓ-க்களின் பெயர், செல்போன் எண்கள் வரும். அதில் தங்களின் உங்களின் வாக்குச்சாவடியின் பெயருக்கு நேராக இருக்கும் பிஎல்ஓவின் செல்போன் எண்ணை நோட் செய்து தொடர்பு கொள்ளலாம். இதன்மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கான விண்ணப்பங்களை எளிதாக பெற்று வாக்குரிமையை காப்பாற்றி கொள்ள முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+