மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்.. உங்கள் அருகில் உள்ள முகாமை கண்டுபிடிப்பது எப்படி? நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் தொடங்கி உள்ள நிலையில் பல இடங்களில் இன்னும் முகாம்கள் தொடங்கப்படாமல் உள்ளது.

ஜூன் 4ம் தேதி இந்த திட்டத்தின் விரிவாக்கம் அறிவிக்கப்பட்டது. அரசு அறிவுப்புப்படி அன்று முதல் 9000 முகாம்கள் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் சில இ சேவை மையங்கள் தவிர மற்ற இ சேவை மையங்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

அதோடு இல்லாமல் ரேஷன் கடைகளிலும் விண்ணப்பங்கள் பல இடங்களில் வழங்கப்படவில்லை. அரசு சார்பாக நேரடியாக நடத்தப்படும் ஒரு சில முகாம்கள் தவிர வேறு எங்கும் முகாம்கள் நடத்தப்படவில்லை. இதனால் பலரும் தங்களுக்கு அருகில் நடக்கும் முகாம்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஆனால் இதற்காக கவலைப்பட வேண்டாம். இன்னும் 1 வாரத்தில் முழுமையாக முகாம்கள் அமைக்கப்பட்டு, அவை எங்கெல்லாம் அமைக்கப்படும் என்ற முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முகாமை கண்டுபிடிப்பது எப்படி?

இப்போதைக்கு சிறப்பு முகாம் அமைக்கப்படவில்லை என்பதால், இ சேவை மையங்களே முகாம்களாக இயங்கும். உங்கள் பகுதியில் சிறப்பு முகாம் பெரும்பாலும் ரேஷன் கடைகள், நகராட்சி, உள்ளாட்சி அலுவலகங்களில் அமைக்கப்படும். இல்லாதபட்சத்தில் இ சேவை மையங்களில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் பின்வரும் விதிகளை மற்றும் விஷயங்களை மனதில் வைத்து விண்ணப்பம் செய்தால் எளிதாக இந்த திட்டத்தில் இணைய முடியும்.

How to find the Tamil Nadu Magalir Urimai Thogai Rs 1000 money scheme camp near you

ஒரே வீட்டில் 2 பெண்கள் இருந்தால் அவர்கள் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசு விதிகள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் பலரும் தங்கள் ரேஷன் கார்டுகளில் மாற்றங்களை செய்ய தொடங்கி உள்ளனர். உதாரணமாக உங்கள் வீட்டில் ஒரு பாட்டி இருக்கலாம். அவர் பென்சன் வாங்கலாம்.

இதனால் வீட்டில் உள்ள மருமகளுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் ஏற்படலாம்.இதனால் பலர் வீடுகளில் பாட்டிகளின் பெயர்களை ரேஷனில் இருந்து நீக்க தொடங்கி உள்ளனர். ஆனால் உங்கள் வீட்டில் எத்தனை பெண்கள் அரசின் பென்சன் வாங்கினாலும் பிரச்சனை இல்லை. அந்த ரேஷன் அட்டையில் குடும்ப தலைவி யாரோ அவருக்கே மகளிர் உரிமை தொகை வழங்க முடியும்.

அவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பென்சன் பெறக்கூடாது. அதாவது குடும்ப தலைவியாக இருப்பவர் பென்ஷன் பெறக்கூடாது. அதேபோல் அவர்களின் கணவர் அரசு வேலை செய்ய கூடாது. மற்றபடி ஒரே வீட்டில் பல பெண்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பென்ஷன் பெற்றாலும் குடும்ப தலைவி என்ற பெயரில் உள்ள பெண்ணுக்கு வழங்கப்படும்.

இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவி அல்லாதவர்களுக்கும் பணம் கிடைக்கும். ஒரு வீட்டில் அப்பா, 2 மகன், 3 மகள் இருக்கிறார்கள். யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அம்மா உயிரோடு இல்லை என்றால் வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய முதல் பெண்ணுக்கு பணம் தரப்படும். அவர் குடும்ப தலைவி இல்லையென்றாலும் மகளிர் உரிமை தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அவர்கள் தகுதியானவராக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+