தமிழ்நாட்டில் ஒரு நிமிட பட்டா எப்படி வாங்குவது? யாருக்கெல்லாம் பத்திரப்பதிவு செய்த உடன் கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவு துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரு நிமிட பட்டா யாருக்கெல்லாம் பத்திரப்பதிவு செய்த உடனே கிடைக்கும்.. அதை வாங்குவது எப்படி என்பதை பார்ப்போம்.

தமிழக அரசு பத்திரப்பதிவு துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. பத்திரப்பதிவு செய்கிறவர்கள் மோசடியில் சிக்கி கொள்ளக்கூடாது என்ற நோக்கில், டிடிசிபி அங்கீகாரம் இல்லாத நிலங்களை பத்திரப்பதிவு துறை பதிவுசெய்வது இல்லை.. அதேபோல் டிடிசிபி அங்கீகாரமும் சரியான விதிமுறையில் தான் வழங்கப்படுகிறது. அதேபோல் ஆறு, குளம்,ஏரி, நீர்வழிப்பாதை, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை பத்திரப்பதிவு செய்வதிலும் பதிவுத்துறை எச்சரித்து வருகிறது.

patta deed

பதிவுத்துறையில் இப்படி என்றால் பட்டா பெயர் மாற்றம் விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் பத்திரப்பதிவு செய்தவர்கள் பத்திரம் முடிக்க எந்த அலுவலகத்திற்கும் சென்று காத்திருக்காமல் ஆன்லைன் மூலமே பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும்.

அடுத்தாக ஏற்கனவே பத்திரப்பதிவு நடந்து இதுவரை பட்டா வாங்காதவர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யும் போது, எந்த பிரிவு பட்டா என்று பார்க்கப்படுகிறது. உட்பிரிவு செய்ய கூடிய பட்டா அல்லது உட்பிரிவு இல்லாத பட்டா ஆகியவற்றில் எதுவாக இருந்தாலும் வரிசைப்படியே பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. உட்பிரிவு செய்ய கூடிய பட்டாக்கு 16 நாட்களுக்குள் கட்டாயம் தீர்வு காண வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. உட்பிரிவு செய்ய வேண்டிய பட்டாவிற்கு 30 நாட்கள் வரை அவகாசம் எடுத்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு மேல் எந்த காரணங்களையும் கூறி பட்டாக்களை நிராகரிக்க முடியாது.

தற்போது ஒரு சொத்தை பதிவு செய்தவுடன், அதற்கான பட்டா மாற்றம் மனு பத்திரப்பதிவு துறை மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த மனுவை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தலைமையிடத்து துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்து பட்டா தருவதற்கு அனுமதி அளிக்கிறார்கள். அதன்படியே பட்டா மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் தான் காலதாமதம் ஏற்படுகிறது. 16 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை பத்திரத்தின் வகையை பொறுத்து மாறுகிறது.

இந்த சூழலில் 'ஒரு நிமிட பட்டா திட்டம்' தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.. இந்த திட்டப்படி, அனுப்பப்படாது. உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா வாங்க விரும்புவோருக்கு மட்டும் ஒரு நிமிட பட்டா வழங்கப்படும். உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா விவகாரத்தில் இனி வருவாய்த்துறைக்கு ஆவணங்கள் அனுப்பப்படாது. சொத்தினை விற்பவர்கள் பெயரில் பட்டா இருந்து, அந்த பட்டாவில் உள்ள சொத்து அளவினை முழுமையாக அப்படியே வாங்குபவர்களுக்கு மட்டுமே உடனடி பட்டா வழங்கப்படும். அதற்கான பணிகள் பெருமளவு முடிந்துவிட்டது. எனவே தானியங்கி முறையில் ஒரு நிமிட பட்டா விரைவில் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் எந்த வில்லங்கமும் இல்லாத ஒரே ஒருவரின் பெயரில் உள்ள சொத்துக்களை அப்படியே மாற்றுவோருக்கு ஒரு நிமிட பட்டா வழங்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+