ஆதார் கார்டு இருக்கா? உடனே போய் லாக் பண்ணிடுங்க.. இல்லைன்னா சிக்கல் ஆகிடும்.. முக்கியம்
சென்னை: ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் பயோமெட்ரிக்ஸை தற்காலிகமாகப் பூட்டும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதில் முறைகேடுகளை தடுக்க முடியும்.
பல சேவைகளைக் பெறுவதற்கு தற்போது ஆதார் அவசியமான ஆவணமாக உள்ளது. ஆதார் முக்கியம் என்பதால் அதை தவறாகப் பயன்படுத்துவதையோ அல்லது சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதையோ தடுப்பது முக்கியம்.

ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் பயோமெட்ரிக்ஸை தற்காலிகமாகப் பூட்ட முடியும். இதன் மூலம் அதை வைத்து செய்யப்படும் முறைகேடுகளை தடுக்கலாம். எளிதாக ஆன்லைன் மூலம் இந்த மாற்றத்தை செய்ய முடியும்.
UIDAI இணையதளத்திற்குச் சென்று, உங்கள் பயோமெட்ரிக்ஸைப் பூட்ட அல்லது திறக்க, "Aadhaar Services " பிரிவின் கீழ் " "Lock/Unlock Biometrics"" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பாதுகாப்புக் குறியீடு மற்றும் 12 இலக்க UID எண்ணை உள்ளிட்ட பிறகு, OTP விருப்பத்தைக் கிளிக் செய்யவும். அதன்பின் OTP கொடுத்து உள்நுழைவு ஆப்ஷனை அழுத்தவும்.
உள்நுழைந்து, திரையில் காட்டப்பட்டுள்ள நான்கு இலக்க பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்ட பிறகு "Enable" என்பதைக் கிளிக் செய்யவும். அதன் மூலம் உங்கள் பயோமெட்ரிக்ஸ் பூட்டப்படும்.
நீங்கள் இதே முறையை பயன்படுத்தி தேவையான நேரத்தில் பயோமெட்ரிக்ஸையும் திறக்கலாம். "உள்நுழை" ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் பயோமெட்ரிக்ஸைத் திறக்க முந்தைய படிகளை மீண்டும் செய்யவும். இந்த முறை Disable கொடுத்தால் பயோமெட்ரிக் பூட்டை திறக்க முடியும். அதே லாக்கை நீங்கள் நிரந்தரமாக நீக்க விரும்பினால் அதை முடக்கவும் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்கள் ஆதார் கணக்கு பயோமெட்ரிக் லாக் இல்லாமல் இருக்கும்.
ஆதார் அப்டேட்; இது போக தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி வரை விவரங்களைத் திருத்தலாம். முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த மாதம்தான் அதற்கான கடைசி வாய்ப்பு . டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இந்த அவகாசம் மார்ச் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மோசடி: ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது.
ஆதார் முக்கியம்: ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. இந்த நிலையில்தான் ஒருவேளை ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
ஆதார் மாற்றம்: உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். இனி மார்ச் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
கட்டணம் இல்லை: myAadhaar பக்கம் மூலம் எளிதாக இவர்கள் விலாசத்தை மாற்றும் வசதி இருந்தது. ஆனால் தற்போது அந்த அவகாசம் நிறைவிற்கு வர உள்ளது. நேற்றோடு இந்த அவகாசம் முடிந்த நிலையில் இனி விலாசத்தை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும்.
இச்சேவையை நேரிடையாக பெற இப்போதும் கட்டணம் உள்ளது. ஆனால் இதுவரை ஆன்லைன் வழியாக இலவசமாக பெற முடிந்தது. .
uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையின் விலாசத்தை புதுப்பிக்க முடியும். இதற்கு கட்டணம் இப்போது இல்லை.. மை ஆதார் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தாமல் விவரங்களை மாற்ற முடியும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications