கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்ற சென்னை வீரர் மரணம்.. ஏன் இப்படி? தடுக்க வழி என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மாதம் கூட பெங்களூரில் நடைபெற்ற கிக் பாக்சிங் போட்டியில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட வீரர் ஒருவர் கோமா நிலைக்கு சென்று பின்னர் உயிரிழந்தார்.
பொதுவாக, குத்துச்சண்டை போட்டிகளில் இதுபோன்ற மரணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதற்கு தீர்வு காண்பது பற்றி கிக் பாக்சிங் சங்கங்களோ அல்லது அரசாங்கமோ யோசிப்பதில்லை.
இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டதும் உடனே கிக் பாக்சிங்கை தடை செய்ய வேண்டும் என்றுதான் பலரும் கூறுகிறார்களே தவிர, இதுபோன்ற மரணங்களை எப்படி தவிர்ப்பது என்று யாரும் சிந்தித்தததாக தெரியவில்லை.
கராத்தே, குங்ஃபூ, களரி போன்ற தற்காப்புக் கலைகள் தொடர்பான போட்டிகளும் தமிழகத்திலும், இந்திய அளவிலும் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அந்தப் போட்டிகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. அப்படியே உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், அது எதிராளி தாக்கியதால் நேர்ந்திரு்ககாது. அதிகபடியான களைப்பு, நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களாலேயே கராத்தே, குங்ஃபூ சண்டைகளில் மிக மிக அரிதாக மரணங்கள் ஏற்படும்.

ஆபத்தானதா கிக் பாக்சிங்
கிக் பாக்சிங்கில் மட்டும் அடிக்கடி மரணங்கள் ஏற்படுவது ஏன்? முறையான தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கிக் பாக்சிங் போட்டிகள் நடைபெற்றாலும் இதுபோன்ற மரணங்களை தவிர்க்க முடியாதது ஏன்? என்கின்ற கேள்விகள் அனைவருக்கும் எழலாம். மேலோட்டமாக பார்த்தால், கிக் பாக்சிங் ஒரு ஆபத்தான விளையாட்டை போல தெரியும். ஆனால், உண்மையில் அது மிகவும் நேர்த்தியான விளையாட்டு. எதிராளியை தாக்குவதும், நாம் தாக்கப்படாமலும் இருப்பதும்தான் அதன் அடிப்படை. அப்படியிருக்கையில், எங்கு தவறு நடக்கிறது?

கராத்தே - குங்ஃபூ
மேலே சொன்னது போல, கராத்தே, குங்ஃபூ, ஜூடோ போன்ற தற்காப்புக் கலைகளில் 'ரேங்க்' (Rank) சிஸ்டம் பின்பற்றப்படும். அதாவது, கராத்தே பயிற்சியில் முதல் ஆறு மாதக்காலத்தை நிறைவு செய்பவர்களு்ககு மஞ்சள் பெல்ட் வழங்கப்படும். பின்னர் ஒரு வருடம், இரண்டு வருடம் என 5 வருடங்கள் வரை பயிற்சியை முடித்தவர்களுக்கு பச்சை, ஆரஞ்சு, பிரெளன் என கடைசியாக கறுப்பு (பிளாக்) பெல்ட் வழங்கப்படும். பிளாக் பெல்ட் என்பது ஒருவர் சம்பந்தப்பட்ட தற்காப்புக் கலையில் நன்றாக தேர்ச்சி பெற்றவர் என்று அர்த்தம். இதுபோலவே, குங்ஃபூ, ஜூடோ உள்ளிட்ட சண்டை கலைகளிலும் இந்த ரேங்க் சிஸ்டம் உண்டு. இப்போது ஒரு உதாரணத்துக்கு கராத்தே போட்டி நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். அங்கு ரேங்க் வாரியாக தான் வீரர்களை மோத விடுவார்கள். அதாவது மஞ்சள் பெல்ட் பெற்றவரை மற்றொரு மஞ்சள் பெல்ட் வீரருடன் மோத விடுவர். அதேபோல, கறுப்பு பெல்ட் பெற்றவர் மற்றொரு கறுப்புப் பெல்ட் வீரருடன்தான் மோதுவார். சமமான அனுபவமும் சமமான பயிற்சியும் பெற்றிருப்பதால் அந்த வீரர்கள் இடையேயான போட்டி நன்றாக இருக்கும். ஆபத்தானதாக மாறாது.

ரேங்கிங் சிஸ்டம் இல்லை
ஆனால், குத்துச்சண்டையிலோ அல்லது கிக் பாக்சிங்கிலோ இதுபோன்ற ரேங்கிங் சிஸ்டம் இல்லாததே இத்தனை ஆபத்துகளுக்கு வழிவகுக்கிறது. மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் கிக் பாக்சிங் அல்லது குத்துச்சண்டை போட்டி நடக்கிறது என்றால் அதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், 8 ஆண்டுகள் கிக் பாக்சிங்கில் பயிற்சி பெற்ற வீரரும், 8 மாதங்கள் பயிற்சி பெற்ற வீரரும் கூட மோதிக் கொள்ளலாம். 8 ஆண்டு ஒருவர் பயிற்சி பெற்றிருக்கிறார் என்றால் அவர் அனுபவமும், அவரது பஞ்சிங் பவரும் (punching power), எதிராளியின் குத்துகளை வாங்கும் திறனும் அதிகமாக இருக்கும். ஆனால் 8 மாதம் பயிற்சி பெற்ற வீரருக்கு அவருக்கு சமமான திறன் இருக்காது. இப்போது இவர்கள் இருவரும் மோதினால் என்ன நடக்கும்? 8 மாதம் பயிற்சி பெற்றவரால் ஒரு சுற்று கூட கூட தாண்ட முடியாது. தோல்வி அடைந்து விடுவார். ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

தலையில் விழும் அடி
பல ஆண்டு பயிற்சி பெற்றவரின் ஒரு அடியானது, சில ஆண்டுகள் பயிற்சி பெற்றவரின் தலை அல்லது முகத்தில் விழும் போது அவரால் அதை தாக்குப்பிடிக்க முடியாது. சில நேரங்களில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளையில் ரத்தக்கசிவு கூட ஏற்பட்டு விடும். இவ்வாறு ஏற்படுவதாலேயே, கிக் பாக்சிங்கில் உயிரிழப்பவர்கள் கோமா நிலைக்கு சென்ற பின்னர் மரணம் அடைவார்கள். எனவே கராத்தே, குங்ஃபூவை போல குத்துச்சண்டை, கிக் பாக்சிங் போன்ற விளையாட்டுகளிலும் ரேங்கிங் சிஸ்டம் கொண்டு வரப்பட்டால் இதுபோன்ற மரணங்களை நம்மால் நிச்சயம் தடுக்க முடியும் என்கின்றனர் பல குத்துச்சண்டை, கிக் பாக்சிங் நிபுணர்கள்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications