பிரிட்ஜ் பின்னால் குழந்தைகளை விடாதீங்க.. ப்ரிட்ஜ் வெடிக்க இதுதான் காரணம்.. வல்லுநர் தந்த விளக்கம்
சென்னை: பிரிட்ஜ் வெடித்து விபத்து என்ற செய்தியை நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து இருப்போம். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.. பிரிட்ஜ்ஜை முறையாக நாம் எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதை எலக்ட்ரீசியன் ஒருவர் விளக்கியுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது எல்லாம் பிரிட்ஜ் என்பது வீட்டில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. நமது அன்றாட வாழ்க்கையில் பிரிட்ஜ் என்பது சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது.

பிரிட்ஜ் வெடிப்பு: அதேநேரம் பிரிட்ஜ் வெடித்துச் சிதறுவதாகவும் நாம் ஆங்காங்கே செய்திகளைப் பார்த்து இருப்போம். இதனால் பொருளாதார இழப்பும் சரி, உயிரிழப்புகளும் கூட ஏற்படுகிறது. இதற்கிடையே இதுபோன்ற விபத்துகள் ஏன் ஏற்படுகிறது. இந்த விபத்துகளைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை டெக்னீசியன் ஒருவர் விளக்கியுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பிரிட்ஜ் வெடிப்பு குறித்துப் பேசிய அவர், "பிரிட்ஜ் பொதுவாக வெடிக்கவே வெடிக்காது. முறையாக அதைப் பராமரிக்கவில்லை என்றால் மட்டுமே அது வெடித்துவிடும். மின் கசிவு ஏற்பட்டால் மட்டும் தீப்பற்றி வெடிப்பு ஏற்படும். மற்றபடி அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அதில் எரிபொருள் வெறும் 80 கிராம் கேஸ் மட்டுமே இருக்கும். இது வெடிக்கும் போது பெரியளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை.
காரணம்: பிரிட்ஜிற்கு சைட்டில் insulation cyclopentane என்ற மெட்டீரியல் இருக்கும். இது எளிதாகத் தீப்பற்றக்கூடிய ஒரு மெட்டீரியல். மின் கசிவு ஏற்படும் போது இது டக்கென தீப்பிடிக்கும். அதுவும் முறையான பராமரிப்பு இல்லை என்றால் மட்டுமே தீப்பிடிக்கும். ஒரு சில மருந்துகளில் குறைந்த அளவுக்கு ஆசிட் எல்லாம் இருக்கும். எனவே, மருத்துவரிடம் இது குறித்து முறையாகக் கேட்ட பிறகே பிரிட்ஜில் வைக்க வேண்டும். பிரிட்ஜ் திடீரென தானாக எல்லாம் வெடிக்காது. மின் கசிவு மட்டுமே ஒரே காரணமாக இருக்கும்.
6 மாதத்திற்கு ஒரு முறை: பிரிட்ஜ்ஜை பொறுத்தவரை 6 மாதத்திற்கு ஒரு முறை சின்ன டெஸ்ட் செய்தால் போதும். ஒரு எலக்ட்ரீசியனை அழைத்து வந்து பிரிட்ஜில் ஆடொமொடிக் கட் ஆஃப் சரியாக இருக்கிறதா.. ஒயரிங் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். மேலும், பிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே அரை அடியாவது இடைவெளி இருக்க வேண்டும் அதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
சின்ன குழந்தைகள்: சின்ன குழந்தைகள் பிரிட்ஜுக்கு பின்னால் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பின்னால் தான் முக்கியமான ஒயரிங் எல்லாம் இருக்கும். சர்கியூட் இருக்கும். கேஸ் கூட அங்கு தான் இருக்கும். அங்குத் தெரியாமல் கை வைத்தால் குழந்தைகளுக்கு மட்டுமில்லை நமக்கே கூட ஷாக் அடிக்கும்.
சிங்கிள் டோர் பிரிட்ஜை பொறுத்தவரை அதில் மேலே ஐஸ் அதிகம் கட்டினால் உடனடியாக எலக்ட்ரீசியனை அழைத்து வந்து காட்டுங்கள். நீங்களாகவே கத்தி அல்லது ஸ்பூனை வைத்து உடைக்க முயலாதீர்கள். அப்போது தான் எதாவது முக்கிய பாகங்களில் பட்டு கேஸ் லீக் ஆக வாய்ப்பு இருக்கிறது. இதுபோல எளிமையான பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றினாலே போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்" என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications