இது தான் ஈஸி "பார்முலா.." இப்படி மட்டும் பணத்தை சேமிங்க போதும்! நீங்களும் சீக்கிரம் பணக்காரர் ஆகலாம்
சென்னை: நீங்கள் யாராக இருந்தாலும் சரி, இந்த பார்முலாவை பயன்படுத்தினால் பணத்தைச் சேமித்து கோடீஸ்வரனாவது ரொம்பவே ஈஸி.. அது என்ன பார்முலா.. அப்படி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்த உலகில் பெரும்பாலான நபர்களிடம் கேட்டோம் என்றால்.. "சம்பளம் போதவில்லை" என்பதே அவர்களின் புலம்பலாக இருக்கும். 10,000 சம்பளம் வாங்கினாலும் சரி லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கினாலும் சரி, அதைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் உங்களுக்குப் பணம் பத்தவே பத்தாது.

இங்கே பலருக்கும் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற யோசனையும் ஆசையும் இருந்தாலும் கூட.. அதை அவர்களால் செய்ய முடிவதே இல்லை. பணத்தை ஈஸியாக சேமிப்பது எப்படி.. அதற்கான திட்டம் என்ன என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
நல்ல பலன் கிடைக்கும்: இந்த முறையில் பணத்தைச் சேமித்து வைத்தால் சில ஆண்டுகளில் உங்களையே அறியாமல் நீங்கள் பெருந்தொகையைச் சேமித்து வைத்துவிடுவீர்கள். சேமிப்பு என்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது எனச் சொல்லும் நபர்கள் இந்த பார்முலாவை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்.. சில மாதங்களில் இதன் பலன் உங்களுக்கே தெரியும்.
அனைவரும் தங்களுக்கு வரும் வருமானத்தில் எந்தளவுக்குச் சேமிக்க வேண்டும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ராஜேஷ் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "50-30-20 முறையில் முதலீடு செய்தால், 10 மாதங்களில், இரண்டு மாத சம்பளத்தைச் சேர்த்து வைத்திருப்பீர்கள். சிந்தித்து, செயல்படுத்துங்கள்.
ஒழுக்கம் ரொம்பவே முக்கியம்: பணம் சேர்ப்பது ஒன்றும் complex ஆன ஒரு கலையில்லை... யார் வேண்டுமானாலும் சேமிக்கலாம்... யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.. யார் வேண்டுமானாலும் பணக்காரர் ஆகலாம். All you need is Discipline, Consistency and Patience" என்று அவர் பதிவிட்டுள்ளார். அதென்ன 50-30-20 முறை என்று கேள்வி உங்களுக்கு வரலாம். அது குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்.
இதுதான் அந்த பார்முலா: அதாவது உங்கள் வருமானத்தை 50-30-20 என்று மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.. அதில் முதல் 50 சதவிகிதத்தை வீட்டு வாடகை, உணவு என உங்கள் அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்த 30 சதவிகிதத்தை உங்களுக்கு விருப்பமானதை வாங்கப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால், மீதமுள்ள 20% வருமானத்தை நிச்சயம் சேமித்து வைக்க வேண்டும்.
நீங்கள் யாராக இருந்தாலும் உங்கள் வருமானத்தை இந்த 50-30-20 முறையில் சேமித்து வைத்தால் பணக் கஷ்டமே வராது. வாங்கிய அனைத்து காசும் செலவாகிறது என்று நீங்கள் சொன்னால்... நீங்கள் வருமானத்திற்குத் தாண்டி பணத்தை அதிகமாகவே செலவு செய்கிறீர்கள் என அர்த்தம். பணத்தைக் கவனமாகவும் ஒழுக்கமாகவும் கையாண்டு செலவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.. எப்போதும் விரலுக்கு ஏற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் விரலே இல்லாமல் போய்விடும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications