தமிழ்நாட்டிற்கு சக்ஸஸ்! டிரம்ப் கொடூர வரி போட்டாலும் நமக்கு சிக்கல் இல்ல! தப்பித்த தமிழ்நாடு! எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகஸ்ட் 7 முதல் இந்தியாவிற்கு எதிராக வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். ஆனால் இந்த வரிகள் காரணமாக தமிழ்நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி பாதிக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது முக்கிய சர்வதேச நிகழ்வாகும்.இந்த அறிவிப்பு குறித்து இந்திய அரசு உடனடியாக பதிலளிக்கவில்லை. பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு நலன் கருதி அமைதி உடன்பாட்டிற்கு இந்தியா தயாராக உள்ளது என்று டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Donald Trump India

இந்தியா இதற்கு பதிலடி வரிகள் எதையும் விதிக்காது, இந்தியா இப்போதைக்கு வலுவான பதிலடி எதுவும் கொடுக்காது என்று டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பல்வேறு பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி பாதிக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மின்னணு ஏற்றுமதி

ஏனென்றால் இந்த கூடுதல் வரி மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படவில்லை. மின்னணு பொருட்கள் ஏற்றுமதி இந்த கூடுதல் வரியில் இருந்து விலக்கு பெற்றுள்ளது. இந்தியாவின் ராணுவ தளவாடத் தேவைகளில் பெரும்பாலானவை ரஷ்யாவிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி வாங்கும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இது இந்தியாவுக்கு விதிக்கப்படும் அபராதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் மின்னனு பொருட்கள் இதில் இணைக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிற்கு சிக்கல்

தமிழ்நாட்டில்தான் இந்தியாவில் ஐபோன் உட்பட மின்னணு பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. டிரம்ப் விதித்துள்ள வரியால் இதில் எந்த பாதிப்பும் இருக்காது. உதாரணமாக ஐபோன் ஏற்றுமதி காரணமாக.. தமிழகத்தின் ஏற்றுமதி முதன்முறையாக இந்த முறை 50 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இது 9 பில்லியன் டாலர் கூடுதல் ஆகும். இதன் மூலம் இந்தியாவில் எந்த பெரிய மாநிலத்திலும் இல்லாத அதிகபட்ச உயர்வை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.

24-25 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் மொத்தப் பங்கு 13.38% (கடந்த ஆண்டில் 10.15% இல் இருந்து உயர்ந்து உள்ளது). இந்த முறை $52.073 பில்லியன் மதிப்புள்ள வணிகப் பொருட்களை மாநிலம் ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு தமிழ்நாடு $43.56 Bn செய்தது. அதாவது தமிழ்நாடு அரசு 9 பில்லியன் டாலர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அடுத்தடுத்து சாதனை

ஏற்கனவே FY25 இல் இந்திய மாநிலங்களில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

1. தமிழ்நாடு: $14.65 பில்லியன்
2. கர்நாடகா: $7.85 பில்லியன்
3. உத்தரப்பிரதேசம்: $5.26 பில்லியன்
4. மகாராஷ்டிரா: $3.51 பில்லியன்
5. குஜராத்: $1.85 பில்லியன்
6. தெலுங்கானா: $641.5 மில்லியன்
7. ஆந்திரப் பிரதேசம்: $387.3 மில்லியன்

2025 நிதியாண்டில் இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 41.2% பங்களித்தது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாறி உள்ளது. கர்நாடகா ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து 3வது வருடமாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. இதனால் உத்தர பிரதேசம் உட்பட எந்த மாநிலமும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது. இதில் ஐபோன் முக்கிய பங்கு வகிக்கிறது. டிரம்ப் விதித்துள்ள வரியால் இதில் எந்த பாதிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+