சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜய் மக்கள் இயக்கம்.. அதுவும் சென்னையில் எப்படி.. அறிவுச் செல்வி பெற்ற வாக்குகளின் பின்னணி இதுதான்

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களின் வெற்றி எப்படி சாத்தியமானது? இதற்காக அவர்கள் வகுத்த வியூகம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    கப்பு முக்கியம் பிகிலு!! வெற்றிக்கொடி நாட்டிய Vijay Makkal Iyakkam Election 2022 Result | Thalapathy

    தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு 129 இடங்களில் வென்றனர். இது மற்ற கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது.

    உச்ச நடிகருக்கு இல்லாத செல்வாக்கு விஜய்க்கா என கேட்கும் அளவுக்கு அவர்களது வெற்றி இருந்தது. அது போல் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அவர்கள் போட்டியிட விஜய் அனுமதித்ததோடு தனது புகைப்படத்தையும் இயக்கக் கொடியையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார்.

    வாஷ்அவுட்.. கெத்து காட்டிய சினேகா.. டெபாசிட்டை இழந்த பெருந்தலைகள்.. திகைத்து போன திருச்சி..!வாஷ்அவுட்.. கெத்து காட்டிய சினேகா.. டெபாசிட்டை இழந்த பெருந்தலைகள்.. திகைத்து போன திருச்சி..!

    உற்சாகம்

    உற்சாகம்

    இதனால் உற்சாகமாக விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கினர். இந்த தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மாஸ் காட்டியுள்ளனர். இதுவரை வெளியான முடிவுகளின்படி, புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3ஆவது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிடட வேல்முருகன், திருச்சி மாவட்டத்தில் பூவாலூர் பேரூராட்சி 15 ஆவது வார்டில் போட்டியிட்ட மேனகா, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21 ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது கவுஸ் ஆகியோர் வென்றுள்ளனர்.

    சென்னை வார்டு

    சென்னை வார்டு

    அத்துடன் சென்னையின் ஒரு வார்டில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தையும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு சுயேச்சை வேட்பாளர்களை இணைத்திருக்கிறார்கள்.

    விஜய் மக்கள் இயக்கம்

    விஜய் மக்கள் இயக்கம்

    வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் மக்களுடன் மக்களாகவே பழகி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தனர். களத்தில் முன்னணி கட்சிகள், சீனியர் கட்சிகள் இருந்த நிலையிலும் இவர்களது தொடர் பிரச்சாரமும், மக்களிடையே அணுகுமுறையும்தான் வெற்றி பெற வைத்தது என்கிறார்கள்.

    வார்டுக்கு ஒரு முறை

    வார்டுக்கு ஒரு முறை

    மற்ற கட்சியினர் ஒரு வார்டுக்கு ஒரு முறை மட்டுமே சென்று பிரச்சாரம் செய்தனர். ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த வார்டுக்கு பல முறை சென்றனர். ஒரு பகுதிக்கு அந்த வேட்பாளர் சென்றால், மற்ற பகுதிகளுக்கு விஜய் மககள் இயக்க நிர்வாகிகள் போய் பிரச்சாரம் செய்துள்ளனர். இதனால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்கிறார்கள்.

    நிலவரசி துரைராஜுக்கு போட்டி

    நிலவரசி துரைராஜுக்கு போட்டி

    சென்னை மாநகராட்சி 136 ஆவது வார்டில் 22 வயது மாணவியான நிலவரசி துரைராஜ் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். இந்த வார்டில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் அறிவுச் செல்வி. இவர் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர். திமுக வேட்பாளர் நிலவரசிக்கு அதிமுக வேட்பாளர் லட்சுமி கடும் போட்டியாக இருப்பார் என கருதப்பட்டது.

    சுயேச்சை வேட்பாளர்

    சுயேச்சை வேட்பாளர்

    ஆனால் நிலவரசி 7122 வாக்குகள் பெற்ற நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் அறிவுச் செல்வி 5112 வாக்குகளை பெற்றுள்ளார். இவரது கணவர் ஏற்கெனவே 2011 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர். எனினும் அவர் அதிமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் பெண்கள் வார்டாக இது அறிவிக்கப்பட்டதால் தனது மனைவி அறிவுச்செல்வியை களத்தில் இறக்கினார்.

    விஜய் மக்கள் இயக்க வியூகம்

    விஜய் மக்கள் இயக்க வியூகம்

    அப்போது அறிவுச் செல்வியை விஜய் மக்கள் இயக்கத்தினர் தேடி வந்து ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். ஏற்கெனவே கணவரின் செல்வாக்கு+ தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவு இருக்கும் என்பதால் ஒப்புக் கொண்டாராம். இதனால்தான் இந்த அளவுக்கு வாக்குகளை அறிவுச்செல்வி பெற்றுள்ளார். ரசிகர்கள் வேட்பாளராக களமிறங்கி அவர்களுக்காக மற்ற ரசிகர்கள் பணியாற்றியது ஒரு புறமிருக்க, சுயேச்சைகளை தேடி தேடி இவர்கள் ஆதரவு தெரிவித்து அவர்களுக்காகவும் வாக்கு சேகரித்துள்ளார்கள். ஒரு வேளை இது விஜய் வகுத்து கொடுத்த வியூகமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    How Vijay Makkal Iyakkam win in local body election? here are the reasons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X