சிபிஐக்கே ஆலோசனை சொல்லிருக்கேன்.. நான் எக்ஸ்பர்ட்.. ரம்மியை எப்படி தடுப்பீங்க? அமர் பிரசாத் கேள்வி
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் டெல்லிக்கு அனுப்பாதது குறித்து தமிழ்நாடு பாஜக இளைஞரணி - விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் தடைக்கான சட்ட மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாத நிலையில் இதற்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் காலாவதியாகி இருக்கிறது. இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு அதன்பின் அவசர சட்டசமாக கொண்டு வரப்பட்டு பின்னர் சட்டசபையிலும் இது நிறைவேற்றப்பட்டது.
இந்த அவசர சட்டம் காலாவதியாகிவிட்ட நிலையில், இன்னும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி அனுமதி அளிக்காமல் இருக்கிறார். ஆளுநரின் இந்த செயல் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி காரணமாக நிறைய பேர் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். முதலில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை வெல்லும் மக்கள், பின்னர் அதில் நிறைய தொகையை வெல்லலாம் என்று நம்பி தங்கள் சேமிப்பு தொகை, வருமானத்தை எல்லாம் இழக்கிறார்கள். இப்படி பணத்தை இழந்த பலர் தமிழ்நாட்டில் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர், பேராசிரியர் என்று படித்தவர்கள், படிக்காதவர்கள் பலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இருந்தும் கூட ஆளுநர் இதில் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறார்.

அமர் பிரசாத் ரெட்டி பேட்டி
கேள்வி - ஆன்லைன் ரம்மி தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாவை அவர் இன்னும் டெல்லிக்கு அனுப்பவில்லையே? இதில் திமுக மட்டுமின்றி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடுமையாக கேள்வி எழுப்பி இருக்கின்றனவே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமர் பிரசாத் ரெட்டி,
பதில் - இந்த விஷயத்தில் நான் வல்லுனர் போல பேச விரும்புகிறேன். சைபர் செக்கியூரிட்டி எக்ஸ்பர்ட்டா இருந்த காரணத்தால் நான் இதை பற்றி பேசுகிறேன். என்னுடைய அனுபவத்தை யாருக்கும் கேள்வி கேட்க முடியாது. சிபிஐக்கே ஆலோசனை சொல்லி இருக்கிறேன். சிபிஐக்கு நான் 3வது பார்ட்டி ஆலோசகராக இருந்துள்ளேன். அதன்படி நான் சொல்கிறேன்.. என்னுடைய தனிப்பட்ட கருத்து.. இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்.

பவர் இருக்கிறதா?
இதுதான் என்னுடைய கருத்து. ஆனால் தமிழ்நாடு அரசுக்கு அதற்கான பவர் இருக்கிறதா? ஆன்லைன் சூதாட்டத்தை விடுங்கள். ஆன்லைனில் இருக்கும் எந்த விளையாட்டாக வேண்டுமானாலும் இருக்கட்டும். செல்போனில் இருக்க கூடிய தொழில்நுட்பம் உங்களிடம் இருக்கிறதா? இந்த கேள்விக்கு அவர்களிடம் பதில் இருக்கிறதா? அதற்கு பதில் வரட்டும் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.. அவசர சட்டம் என்ன ஆனது.. மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்து போட்டாரா என்பதெல்லாம் இருக்கட்டும். அதற்குள் நான் போக விரும்பவில்லை. அது எல்லாம் எனக்கு தெரியாது. அதில் நான் பதிலும் சொல்ல முடியாது.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து எந்த வல்லுநர் வேண்டுமானாலும் பதில் சொல்லட்டும்.. தமிழ்நாட்டில் இந்த செயலியை நீங்கள் எப்படி தடை செய்ய போகிறீர்கள், என்றார்.

அவசர தடை
கேள்வி - தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டம் வந்த மறுநாள், அந்த செயலி செயல்படவில்லை. மறுநாளே செயலி செயல்படாமல் போனது. அப்படி என்றால் அதை தடை செய்ய முடியும் என்று தானே அர்த்தம்.
பதில் - ஆன்லைன் ரம்மியில் நிறைய அதிகாரபூர்வ, அதிகாரபூர்வமற்ற ஆப்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட செயலிகள் உள்ளன. அதை எல்லாம் தடை செய்ய முடியுமா? உங்க இஷ்டத்துக்கு எல்லாம் கையெழுத்து போட முடியுமா? முடியாது சார்.. இந்தியாவின் ரிஜிஸ்டர் செய்த கம்பெனி நீங்கள் சொன்னதை கேட்பான். வெளிநாட்டு கம்பெனி எப்படி கேட்பான். யார் கிட்ட சார் வடை சுடுறீங்க? இவர்களிடம் அதற்கான தொழில்நுட்ப அறிவு இருக்கிறதா? ஆளுநர் ஏன் கையெழுத்து போடவில்லை என்று எனக்கு தெரியாது? அவரின் பிஆர்ஓ நான் கிடையாது.

திமுக பொய்
கேள்வி - ஆளுநர் அண்ணாமலைக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கிறார்.. ஆனால் சட்ட அமைச்சருக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கவில்லையே?
பதில் - இவர் எப்போது அப்பாயின்மென்ட் கேட்டார். திமுகவினரை போல பொய் சொல்லும் ஆட்களை உலகத்திலேயே பார்க்க முடியாது. அவர்களை போல ஆட்களை பார்க்க முடியாது. குண்டு வெடிப்பையே சிலிண்டர் வெடிப்பு என்று கூறியவர்கள். அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? குடும்ப தலைவிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுப்பாரா? இதுவரை கொடுக்கவில்லையே? அதை கொடுப்பார்களா? வட்டியோடு சேர்த்து கொடுப்பார்களா? இந்த ஆட்சிக்கு மார்க் கொடுக்க வேண்டும் என்றால் 100க்கு 5 மார்க் வேண்டும் என்றால் கொடுப்பேன். அவ்வளவுதான். இந்த ஆட்சி மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்துவிட்டது.
ஜல்லிக்கட்டு
கேள்வி - ஆன்லைன் ரம்மி மசோதாவிற்கு கவர்னர் கையெழுத்து போட மறுக்கிறாரே? நீங்கள் வல்லுனர் என்கிறீர்கள்.. நீங்கள் சொல்லும் தடை செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்றால் முதலில் அதற்கு கவர்னர் கையெழுத்து போட வேண்டுமே?
பதில் - நான் அதற்குள் போக மாட்டேன். என்னால் அதில் பதில் சொல்ல முடியாது. ஆளுநர் இதில் எதுவும் செய்ய முடியாதே. என்னை மக்கள் விமர்சனம் செய்யட்டும். ஆளுநர் ஒன்றும் திமுகாரர் போல ஏமாற்ற மாட்டார். அவரின் கையெழுத்துக்கு மதிப்பு இருக்கிறது. அது வெறும் ஆவணம் கிடையாது. ஆளுநரின் கையெழுத்து மதிப்பு இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்க காரணம் யார்?தமிழ்நாடே இதற்காக போராடியது. ஆனால் காங்கிரஸ் கொடுக்க கூடாது என்று சொன்னது. திமுக அவர்களுக்கு சப்போர்ட் செய்தது. ஆனால் ஜல்லிக்கட்டை கொடுக்க வேண்டும் என்று சொன்னது பாஜக. அந்த போராட்டத்தில் எனக்கு பங்கு இருக்கிறது. நான் போராட்டத்தில் ஈடுபட்டதை மறுப்பார்களா? பொன்னார் சார்பாக ஒரு டீம் போய் இதற்காக கடுமையாக உழைத்தனர். இரவோடு இரவாக இதற்காக அவசர சட்டம் கொண்டு வந்தனர். அப்படிப்பட்ட பிரதமர் நம் பிரதமர். 130 கோடி இந்தியர்கள் பாதுக்காக்க வேண்டிய மொழி தமிழ் என்கிறார். எந்த பிரதமர் சார் இப்படி சொல்லி இருக்கிறார்?, என்று அமர்ப்பிரசாத் ரெட்டி கேள்வி எழுப்பிஉள்ளார் .
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications