அதிமுக - பாஜக கூட்டணியால்.. சீமான் கோர்ட்டில் பந்து.. நாம் தமிழர் எடுக்குற முடிவுதான்.. கேம் சேஞ்சர்
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி அமைக்க போவதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. நேற்று நடந்த மீட்டிங் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு கருத்துக்களை தெரிவித்தாலும் கூட்டணி உறுதியாகிவிட்டது என்றே அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.

முக்கிய முடிவுகள்
எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர். அதாவது எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு சிக்கல் இல்லை. அவர் முதல்வர் வேட்பாளர் + அதிமுக பொதுச்செயலாளர். இரண்டும் இருக்கும். ஆனால் ஆனால் அவர் அண்ணாமலை பதவியை மாற்ற வேண்டும் என்று அமித் ஷாவிடம் கோரிக்கை வைக்க முடியாது. அண்ணாமலை பதவியை தொடருவார் என்று இதற்காக சொல்ல முடியாது. அண்ணாமலை தொடர்பாக என்ன முடிவாக இருந்தாலும் பாஜகவே எடுக்கும். அதில் எடப்பாடி பழனிசாமி தலையிட முடியாது.
டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவில் சேர்ப்பது பற்றி கேட்கப்படாது. இதற்கான அழுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படாது, என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மும்முனை போட்டி
இப்போது இந்த நிலவரப்படி பார்த்தால் தமிழக அரசியலில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக - காங்கிரசின் இந்தியா கூட்டணி. அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி. கடைசியாக தமிழக வெற்றிக் கழகம். இதில் தமிழக வெற்றிக்கழகம்.. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிவிட்டது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டது. இதனால் அவர்கள் இருவருடனும் திமுக சேரவே வாய்ப்பு இல்லை.
எனவே தமிழக வெற்றிக் கழகம் 3வது அணியாக உருவெடுத்து இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இருக்க மிச்சம் இருப்பது நாம் தமிழர்தான்.
நாம் தமிழர் கேம் சேஞ்சர்
நாம் தமிழர் இதில் கேம் சேஞ்சர் ஆக முடியும். ஏனென்றால் அவர்களிடம் 8-10 சதவிகிதம் வாக்குகள் உள்ளன.
1. நாம் தமிழர் தனியாக நின்றால் 4 முனை போட்டி உருவாகி வாக்குகள் பிரியும். எதிரணி வாக்குகள் பிரிந்தால் அது திமுகவிற்கு சாதகம்.
2. அதிமுக - பாஜக கூட்டணிக்கு சென்றால்.. அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க கூட சாதகமான சூழல் ஏற்படும்.
3. அதுவே விஜய் கூட்டணிக்கு போனால்.. விஜய் - சீமான் கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்று... தேமுதிக ஒரு 2011ல் திமுகவை எதிர்க்கட்சி சீட்டில் இருந்து அகற்றியது போல.. அதிமுகவை எதிர்க்கட்சி கூட ஆக விடாமல் செய்ய முடியும்.
4. சீமான் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே களம் மாறுபடும். பெரியார் விவகாரம், பெண் பலாத்கார வழக்கு காரணமாக தற்போது முடங்கி உள்ள சீமான் மீண்டும் ஆக்டிவ் ஆகும் பட்சத்தில் அது பெரிய வாக்கு வங்கி மாற்றங்களை ஏற்படுத்தலாம்












Click it and Unblock the Notifications