‛அதிரடி’.. மயிலாப்பூர் பாஜக தேர்தல் அலுவலகத்துக்கு ‛சீல்’.. அறநிலையத்துறை ஆக்ஷன்.. பரபரக்கும் சென்னை
சென்னை: சென்னை மயிலாப்பூர் பாஜக தேர்தல் அலுவலகத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை இன்று சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்திலும் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.

இதனால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் பாஜக தேர்தல் அலுவலகத்துக்கு திடீரென்று அறநிலையத்துறையில் சீல் வைத்துள்ளனர்.
அதாவது சென்னை மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான கட்டடம் வணிக பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களில் கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் தான் வணிக பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட கட்டடத்தில் பாஜக சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது விதிமீறலாகும். இதுபற்றி இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து இன்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பாஜக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications