சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்.. அடுத்தகட்ட திட்டம் இதுதான்.." சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு

Google Oneindia Tamil News

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சில முக்கிய கருத்துகளைத் தெரித்துள்ளார்.

Recommended Video

    சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்.. அடுத்தகட்ட திட்டம் இதுதான்.. - அமைச்சர் சேகர்பாபு

    தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்க நகைகள், உருக்கப்பட்ட தங்கக் கட்டிகளாக மாற்றி வங்களில் டெபாசிட் செய்யப்படுகிறது.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிகளை கவிழ்க்க ஒரே பார்முலா!3 ஆண்டுகளில் 4 மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக! எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிகளை கவிழ்க்க ஒரே பார்முலா!3 ஆண்டுகளில் 4 மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக!

    அப்படி டெபாசிட் செய்யப்படும் போது, அதில் இருந்து கிடைக்கும் வட்டியைக் கோயில் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

     அமைச்சர் சேகர்பாபு

    அமைச்சர் சேகர்பாபு


    இதனிடையே இன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் 130 கிலோ தங்க நகைகள் கட்டிகளாக மாற்ற வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் அமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக நகைகளும் பெறப்படுகிறது.

    நகைகள்

    நகைகள்

    இப்படி காணிக்கையாகப் பெறப்படும் நகைகள் உரிய முறையில் பிரிக்கப்படுகிறது. அவை மும்பையில் இருக்கும் மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும். அதில் கிடைக்கும் வட்டியில் கோவில் திருப்பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இது மிகவும் சிறப்பான ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தை அறிவித்த போது பலரும் அவதூறு பரப்பினர்.

     வருமானம் அதிகரிக்கும்

    வருமானம் அதிகரிக்கும்

    இருப்பினும், அனைத்தையும் தாண்டி முதல்வரின் தெளிவான வழிகாட்டுதல் படி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் திருக்கோவில்களுக்கு வருமானம் அதிகரிக்கிறது. அதேபோல மக்களின் அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களில் 130 கிலோ 512 கிராம் தங்கம் பிரித்து எடுக்கப்பட்டது. அவை நீதிபதி கண்காணிப்பில் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

     தங்கத்தேர்

    தங்கத்தேர்

    பெரியபாளையம் உள்ளிட்ட மூன்று கோவில்களில் 18 மாதங்களில் தங்கத் தேர் செய்யப்பட்டுத் தேர்ப் பவனி நடைபெறும். அதேபோல பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் 125 கோடி ரூபாய் செலவில் பல திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல வரும் நவம்பர் மாதம் சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்,.

    திட்டம்

    திட்டம்

    தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்குப் பதில் அளித்த அவர், "சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தைப் பொறுத்தவரை அதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்" என்றார். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கனக சபையில் பக்தர்களை அனுமதிக்காதது, தமிழில் தேவாரம், எனப் பல விவகாரங்களில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நடராஜர் கோயிலின் வரவு-செலவுக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்ற போதும், தீட்சிதர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காதது குறிப்பிடத்தக்கது.

     புகார்

    புகார்

    முன்னதாக நேற்று இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "ஏற்கெனவே சிதம்பரம் திருக்கோயிலில் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளும், அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் குறித்தும் புகார்கள் வந்துள்ளன. இப்போது லட்சக் கணக்கில் இது குறித்து மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    English summary
    Sekarbabu explains about TN govt scheme on gold in tamilnadu temples: (சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தமிழ்நாடு அரசு) Tamilnadu govt plans to take action against Chidambaram Natarajar temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X