காலையில் பரபரப்பு! சிஇஓ தொடங்கி ஜூனியர் வரை.. ஒரே நாளில் டெர்மினேஷன் மெயிலை அனுப்பிய பிரபல நிறுவனம்
சென்னை: பிரபல நிறுவனம் ஒன்றின் சிஇஓ தொடங்கி ஜூனியர் ஊழியர் வரை அனைவருக்கும் காலையில் திடீரென இன்றே உங்களுக்குக் கடைசி வேலை நாள் எனச் சொல்லி டெர்மினேஷன் மெயில் போய் இருக்கிறது. இதனால் பலரும் பதறிப் போனார்கள். உண்மையில் அங்கு என்ன நடந்தது என்று தெரிய வந்த பிறகே பலரும் நிம்மதிப் பெருமூச்சை விட்டனர்.
இந்தக் காலத்தில் வேலையிழப்பு என்பது பரவலாக நடந்து வருகிறது. பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட சிக்கல்களால் வேலையிழப்புகள் தொடர்கதையாகி வருகிறது. எந்தவொரு எச்சரிக்கையும் கூட இல்லாமல் திடீர் திடீரென டெர்மினேஷன் மெயில்களும் கூட பலருக்கும் அனுப்பப்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

பணிநீக்க மெயில்
பிரபல நிறுவனத்தின் ஹெச்ஆர் டீம், அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் டெர்மினேஷன் நோட்டீஸை அனுப்பிவிட்டாராம். அதாவது வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்திருக்கிறார். திடீரென எந்தவொரு எச்சரிக்கையோ அல்லது மெசேஜ் எதுவும் இல்லாமல் இந்த மெயில் வந்ததால் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதில் விஷயம் என்னவென்றால் அந்த நிறுவனத்தின் சிஇஓவுக்கும் கூட டெர்மினேஷன் மெசேஜ் போய் இருக்கிறது. இந்தத் தகவலால் பலரும் குழம்பி போனார்கள். அதன் பிறகே ஹெச்ஆர் தவறுதலாக அந்த மெயிலை அனைவருக்கும் அனுப்பியது தெரிய வந்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
என்ன நடந்தது
அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் இது தொடர்பான பதிவை ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். வேலையை விட்டு நிற்கும் ஊழியர்கள், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்குத் தானாக மெயில் அனுப்ப உதவும் ஒரு ஆடோமெஷன் டூலை அவர் வேலை செய்து வந்த நிறுவனத்தின் ஹெச்ஆர் டீம் டெஸ்ட் செய்துள்ளனர்.
அப்போது ஹெச்ஆர் டீமில் இருந்தவர்கள் தெரியாமல் டெஸ்டிங் என்பதற்கு லைவ் என மாற்றியுள்ளனர். இதன் காரணமாகவே நிறுவனத்தில் வேலை செய்யும் சிஇஓ முதல் ஜூனியர் அதிகாரி வரை எல்லாருக்கும் இந்த டெர்மினேஷன் மெயில் போய் இருக்கிறது.
கடைசி நாள்
இது தொடர்பாக அந்த நபர் மேலும், "இன்று காலை சிஇஓ உட்பட 300 ஊழியர்களுக்கு ஒரு மெயில் வந்தது. அதில், 'உங்களின் கடைசி வேலை நாள் இதுதான்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆபீசில் எல்லாருக்கும் இந்த மெயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் குழப்பமடைந்தனர். ஒரு மேனேஜர், இப்போதே நான் கிளம்ப வேண்டுமா என்ன என்று கூட கேட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
இப்படி ஆபீஸ் முழுக்க குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐடி துறை உடனடியாக இது குறித்து விளக்கமளித்து இன்னொரு மெயிலை அனுப்பி இருக்கிறது. அதில், "உங்களில் யாரும் டெர்மினேஷன் செய்யப்படவில்லை. யாரும் உங்கள் ஐடி கார்டுகளை திருப்பித் தர தேவையில்லை" என்று மெயிலை அனுப்பியுள்ளனர். ரெட்டிட் தளத்தில் r/Wellthatsucks என்ற சப் க்ரூப்பில் இதைப் பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாகத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் டெர்மினேஷன் இருக்கும். இப்படித் தான் ஒரு சமயம் நாள் என் வேலையை விட விரும்பினேன்.. அப்போது சரியான நேரத்தில் அவர்கள் என்னைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தனர். இதனால் எனக்கு 3 மாதச் சம்பளம் கிடைத்தது, உடனடியாக வேலையை விட்டு வெளியேறவும் முடிந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications