ஆ "உதயசூரியன்" எம்.பியா?.. செம தில்லு.. முழுசா பாஜக பக்கம் போயிட்டாரே.. ஓபனா கூட்டணி அறிவிச்சிட்டாரே
ஐஜேகே பாரிவேந்தர் பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்
சென்னை: கடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே திமுகவின் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி, தற்போது எம்பி தேர்தலுக்கான தன்னுடைய கூட்டணி பற்றி தெரிவித்துள்ளது. இது அரசியல் களத்தில் கவனத்தை பெற்று வருகிறது.
உதயசூரியன் சின்னத்தில் எம்பியாக இருந்துகொண்டே, திமுகவை சரமாரி விமர்சித்து வருபவர் ஐஜேகே பாரிவேந்தர்.. "குடும்ப ஆட்சி, குடும்ப அரசியல் கூடாது.. பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் குடும்ப அரசியல் ஒழிக்கப்படும்" என்றெல்லாம் பேட்டிகளை தந்து வருபவர்.
எனினும், கருத்து வேறுபாடு காரணமாக இப்படி பேசுகிறாரா? அல்லது கூட்டணி மாற போகிறாரா? என்ற யூகங்களும் சந்தேகங்களும் கிளம்பின..

உதயசூரியன்
இப்படிப்பட்ட சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு, ரவி பச்சமுத்துவின் பிறந்தநாள் விழாவிலேயே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.. திமுக எம்பி வீட்டில், அண்ணாமலையா? என்று அப்போதே பலர் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.. அத்துடன் பாஜக - பாரிவேந்தர் கூட்டணியும் ஓரளவு சாத்தியம் என்றே சலசலக்கப்பட்டது. பிறகு 2 மாதம் மாதம் முன்பு, திடீரென, எடப்பாடி பழனிசாமியை ரவி பச்சமுத்து நேரில் சென்று சந்தித்து பேசியிருந்ததும், கூடுதல் குழப்பத்தை தந்தது..

IPS அண்ணாமலை
ஆனால், எல்லாவித யூகங்களும் கடந்த மாதம் நொறுங்கிவிட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய அறிவாளி என்று சர்ட்டிபிகேட் தந்து செய்தியாளர்களிடமும் பேசியிருந்தார் பாரிவேந்தர்.. "நிருபர்களும் நீங்கள் கொஞ்சம் சூழ்நிலையை அனுசரித்து போகணும்.. அண்ணாமலை சின்ன வயசில் பெரிய பதவிக்கு வந்திருக்கிறார்.. அவர் மிகப்பெரிய அறிவாளி.. அவர் இல்லேன்னா, இன்னைக்கு எதிர்க்கட்சியே இல்லாமல் போயிருக்கும்.. கையில் அத்தனை டேட்டாவும் வைத்திருக்கிறார்.. எல்லா வரலாறுகளையும் கையில் வைத்திருக்கிறார்.. ஐபிஎஸ் வரை படிப்பது அவ்வளவு லேசான காரியம் இல்லை.. எந்த கேள்விக்கும் பதில் சொல்கிறார்..

ஜே ஜே
அவர் பேட்டி தருகிறார் என்றாலே, இருக்கிற எல்லா சேனல்களும் கிளம்பி வந்துடறீங்களே.. அஅப்பறம் ஜே ஜே என்று சத்தம் போடறீங்க. அவருக்கு சொந்த கட்சியில் சில பிரச்சனைகள் இருக்கிறது.. அந்த பிரச்சனைகள் காரணமாக, அவர் சிரமத்தில் இருக்கிறார்.. இந்த நேரத்தில் போட்டி போட்டுக் கொண்டு, சில கேள்விகளை கேட்பது என்பது முறைகிடையாது.. தமிழகத்துக்கு தேவையான சிறந்த தலைவர் பாஜகவில் இப்போது இருக்கிறார் என்று பாராடியதுடன், தன்னுடைய சொந்த டிவி சேனலின் செய்தியாளரையே அப்போது கடிந்து கொண்டு பேசியிருந்தது, மொத்த யூகத்துக்கும் ஒரு முடிவை கட்டிவிட்டுப்போனது.

அறிவாளி அண்ணாமலை
இப்போது விஷயம் என்னவென்றால், "நாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம்" என்று கொஞ்சம்கூட பயப்படாமல் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர். கடந்த 5-ம் தேதி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகத்தை சந்தித்த பாரிவேந்தர், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய ஒப்புதல் கடிதத்தை தந்தார்.. அப்போது செய்தியாளர்கள் அவரிடம் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு, தாங்கள் பாஜகவுடன் தோழமையில் இருக்கிறோம்.. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியிலேயே நிற்க போகிறோம்" என்று ஓபனாகவே சொல்லி உள்ளார் பாரிவேந்தர்.

தோழமை கட்சி
கடந்த எம்பி தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற பாரிவேந்தர், இன்னமும் திமுக உறுப்பினராகவே நாடாளுமன்றத்தில் தொடர்கிறார்... இந்த நிலையில், பாஜவுடன் தோழமையுடன் இருக்கிறோம் என்றும் அவர்களுடன்தான் கூட்டணி என்றும் சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியாமல் சில நிர்வாகிகள் குழம்பி போயுள்ளனராம்.. இப்போது அதிமுகவுக்கும் தன்னுடைய ஆதரவை பாரிவேந்தர் தெரிவித்துள்ள நிலையில், எப்படியும் பாஜக கூட்டணியில் ஐக்கியமாவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

ரவிபச்சமுத்து
கடந்த 2 மாதங்களுக்கு முன்னேயே, பெரம்பலூர் தொகுதியை பாரிவேந்தர், பாஜகவிடமே நேரடியாக கேட்டு வாங்கியதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்ல, உடல்நலக்குறைவால் இந்த முறை போட்டியிட போவதில்லை என்றும், தனக்கு பதிலாக ரவி பச்சமுத்துவை போட்டியிட முன்னிறுத்தலாம் என்றும் பாரிவேந்தர் யோசிப்பதாகவும் செய்திகள் கசிந்தன... அதேசமயம், இப்படி திடீர் கூட்டணி மாற்றத்திற்கு சில காரணங்களும் வட்டமடிக்கின்றன..

ரவி பச்சமுத்து
இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள தங்களது கல்லூரிகளை சிக்கலின்றி நடத்தி செல்வதற்கு, பாஜகவின் தயவு மட்டுமே தேவையாக உள்ளதாம்.. எனவேதான், தமிழக அரசியலையும் தாண்டி, மத்திய பாஜகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாம் பாரிவேந்தர் தரப்பு.. உள்ளாட்சித் தேர்தலிலேயே இந்திய ஜனநாயக கட்சி, திமுகவின் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட்டதற்கு காரணமும் இதுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. இப்போது பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளதையும், திமுக கவனித்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications