ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக்
சென்னை: நகைக்கடைகளில் கூட்டம் குறையுதா? இளைஞர்கள் தங்க நகையை விட்டு விலகுகிறார்களா..? இளம் முதலீட்டாளர்கள் தங்கத்தை நகையாக வாங்கத் தயங்குவதற்கு மிக முக்கியக் காரணம் என்ன? நகைக்கடை உரிமையாளர்களுக்கு உள்ள சவால்கள் என்னென்ன? ஒரு பெரிய மாற்றமாக, 'டிஜிட்டல் தங்கம்' மற்றும் கோல்டு ETF-க்கு மாறும் போக்கு மார்க்கெட்டை அமைதியாக உலுக்கி வருகிறதாம்.. அதை பற்றின தகவலை இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
இந்திய பண்பாட்டில் தங்கம் என்பது வெறும் உலோகமல்ல, அது ஒரு உணர்ச்சிப்பூர்வமான சேமிப்பு. காலம் காலமாகப் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுவதே அதற்குச் சாட்சி.

ஆனால் கடந்த சில வருஷங்களாகவே ஆண்டுகளாக இந்த வழக்கத்தில் ஒரு மிகப்பெரிய பிசினஸ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 90s மற்றும் 2k கிட்ஸ் எனப்படும் இளம் தலைமுறையினர், தங்கத்தை நகையாக அணிவதை விட, அதை ஒரு டிஜிட்டல் சொத்தாக பார்ப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். இந்த மாற்றம் ஒட்டுமொத்த நகைக்கடை வர்த்தகத்தையே ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளது.
டிஜிட்டல் தங்கம் (Digital Gold) மீது கிரேஸ் ஏன்?
இளம் முதலீட்டாளர்கள் தங்கத்தை நகையாக வாங்கத் தயங்குவதற்கு மிக முக்கியக் காரணம் 'செய்கூலி மற்றும் சேதாரம்' தான் என்கிறார்கள் நிபுணர்கள்..
ஒரு நகையை வாங்கும்போது சுமார் 10% முதல் 20% வரை இந்த கட்டணங்களுக்கே சென்றுவிடுகிறது. ஆனால் டிஜிட்டல் தங்கம் அல்லது கோல்டு இடிஎஃப் (Gold ETF) போன்றவற்றில் முதலீடு செய்யும்போது, ஒரு ரூபாய் கூட வீணாகாமல் முழுத் தொகையும் தங்கத்தின் மதிப்பிற்கே செல்கிறது. மேலும், நகையைப் பாதுகாப்பதில் உள்ள ரிஸ்க், லாக்கர் வாடகை போன்ற தலைவலிகள் டிஜிட்டல் முறையில் இல்லை என்பது இளைஞர்களை வெகுவாக ஈர்க்கிறது.
தங்கப் பத்திரத் திட்டம்
பங்குச் சந்தையில் கோல்டு இடிஎஃப் மற்றும் சோவரின் கோல்டு பாண்ட் (SGB) போன்ற திட்டங்கள் இன்று பல மடங்கு வளர்ந்துள்ளன. ஸ்மார்ட்போனில் ஜஸ்ட் ஒரே ஒரு கிளிக் மூலம் ஒரு கிராம் தங்கம் வாங்கும் வசதி வந்த பிறகு, நடுத்தர வர்க்க இளைஞர்கள் தங்கள் மாத சம்பளத்தில் ஒரு சிறு பகுதியை தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.
நகைக்கடைக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்து தேர்வு செய்வதை விட, சந்தை நிலவரப்படி உடனுக்குடன் மொபைலில் வாங்குவது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. இதனால் நகைக்கடைகளுக்கான 'ஃபுட்ஃபால்' (Footfall) எனப்படும் கஷ்டமர்களின் வருகை கணிசமாகக் குறைய தொடங்கியுள்ளதாம்.
நகைக்கடை ஓனர்களுக்கு சவால்கள்
பெரிய நகைக்கடை நிறுவனங்கள் இப்போது தங்கள் வியாபார யுக்தியை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. வெறும் திருமண நகை விற்பனையை மட்டுமே நம்பியிருக்காமல், அவர்களும் இப்போது டிஜிட்டல் கோல்டு திட்டங்களைத் தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இளைஞர்களை கவர குறைந்த எடையுள்ள லைட் வெயிட் நகைகள் மற்றும் நவீன டிசைன்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் முதலீட்டு ரீதியாக தங்கத்தை பார்ப்பவர்கள் டிஜிட்டல் முறையையே பாதுகாப்பானதாகவும் லாபகரமானதாகவும் கருதுகிறார்கள்.
பிசினஸ் ஆங்கிள் எப்படி?
இதையே பிசினஸ் ஆங்கிளில் பார்த்தால், தங்கம் என்பது இனி ஒரு அலங்கார பொருளாக மட்டும் இல்லாமல், ஒரு வலுவான நிதிச்சொத்தாக மாறிவிட்டது... இனி வரக்கூடிய வருடங்களில் டிஜிட்டல் தங்கத்தின் பங்களிப்பு இன்னும் அதிகரிக்கும். இது நகைக்கடைத் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமாம்.. ஆக மொத்தம், லாபம் மற்றும் பாதுகாப்பை நோக்கிய இளைய தலைமுறையின் இந்த பயணம், இந்தியத் தங்கச் சந்தையின் போக்கையே மாற்றி எழுதி வருகிறது என்று சொல்லலாம்...!!












Click it and Unblock the Notifications