எல்லாமே டிஜிட்டல் மயமாகிறது.. வந்துவிட்டது க்யூ ஆர் கோடு.. சொத்து வரி, குடிநீர் வரியில் அதிரடி மாற்றம்!
சென்னை: சென்னை மாநகராட்சியில், குறித்த நேரத்தில் சொத்துவரி செலுத்திய பொதுமக்களுக்கு ஊக்கத் தொகையாக மொத்தம் ₹8.57 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் அடிப்படை நிர்வாக பணிகளை கவனிக்க நிதி நிர்வாகத்தில் சொத்து வரி பெரிய அளவில் உதவியாக உள்ளது. அதன்படி 15 மண்டலங்களும், 200 வார்டுகளுக்கும் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சொந்தமாக வீடு வைத்து இருப்பவர்கள், நிலம் வைத்து இருப்பவர்கள் ஆகியோரிடம் இந்த சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. சொத்து வரி செலுத்துவதற்கான கடைசி தேதி ஒவ்வொரு வருடமும் மார்ச் 31 ஆகும்.இந்த தேதிக்குள் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துமாறு மாநகராட்சி சார்பாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து இந்த சொத்து வரி வாங்கப்படும். வசதி கருதி இரண்டு கட்டமாக இந்த சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரி எவ்வளவு என்பதை https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சியில், குறித்த நேரத்தில் சொத்துவரி செலுத்திய பொதுமக்களுக்கு ஊக்கத் தொகையாக மொத்தம் ₹8.57 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னையில் குறித்த காலத்திற்குள் ₹372.74 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
சொத்து வரி: அந்த வகையில் சொத்து வரியை சரியாக செலுத்துவோரை பாராட்டும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் மக்களுக்கு இந்த ஊக்க தொகை வழங்கப்படுகிறது.
5 சதவிகிதம் வரியில் ஊக்கத்தொகை வழங்கப்படும். அல்லது 5 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.அந்த வகையில் சென்னையில் குறித்த காலத்திற்குள் ₹372.74 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
அபராதம்: சொத்து வரி முதல் கட்ட தொகை செலுத்த கால அவகாசம் முடிந்துவிட்டது. அதனால் இனி கட்டணம் செலுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.இதுவரை செலுத்தப்படாத சொத்து வரிக்கு இரண்டு சதவீத அபராதம் விதிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். இதை தவிர்க்க உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
சென்னையில் இதுவரை சுமார் 8.3 லட்சம் பேரிடமிருந்து மட்டுமே வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வரி செலுத்தவில்லை. இவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய முறை: ஆனால் இந்த பணிகளை எல்லாம் செய்ய அதிக நாட்கள் ஆகின்றன. முக்கியமாக ஒவ்வொருவரின் ஆவணங்களை ஆய்வு செய்ய அதிக நாட்கள் ஆகின்றன. இந்த நிலையில்தான் தாம்பரம் மாநகராட்சியில் புதிதாக இதை எல்லாம் கவனிக்க க்யூ ஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன .
குடிநீர், சொத்து வரி உள்ளிட்ட சேவைக்கு,அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி க்யூஆர் கோடு ,தாம்பரம் மாநகராட்சி மூலம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் எல்லா வீடுகளுக்கும் ஒரு க்யூ ஆர் கோடு இருக்கும். அதில் அவர்கள் ஸ்கேன் செய்து எவ்வளவு கட்ட வேண்டும் என்று பார்க்க முடியும்.
அதிகாரிகளும் இதை ஸ்கேன் செய்து எவ்வளவு கட்ட வேண்டும் , எவ்வளவு மீதம் உள்ளது , எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
உயர்வு: கடந்த வருடம் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150% வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.
600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பலமடங்கு உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்ட குழுவின் அறிக்கையானது அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications