நேற்று அப்படின்னா.. இன்றைக்கு இப்படியா? சென்னை வானிலையில் மெகா மாற்றம்! தமிழ்நாட்டிற்கும் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிலும், சென்னையிலும் இன்று பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.

Huge change in Tamil Nadu weather: Possible heavy rain in Chennai and other parts of the state

சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.

நேற்று வானிலை:

நேற்று கூட தமிழ்நாட்டில் மிக மோசமான வானிலை நிலவியது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நாமக்கல், திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நேற்று கடுமையான வெயில் நிலவியது.

40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை தாண்டி நேற்று வெயில் நிலவியது.

இன்று வானிலை:

தமிழ்நாட்டில் நேற்று வெயில் தீவிரமாக இருந்த நிலையில், தமிழ்நாட்டிலும், சென்னையிலும் இன்று பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யும். வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் படிப்படியாக வெப்பநிலை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்திய வானிலை மையம்:

இந்த நிலையில், இந்தியாவில் நிலவி வந்த வெப்ப அலை முடிவிற்கு வந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நேற்றோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் வெப்ப அலை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்று முதல் வெப்பநிலை குறையத் தொடங்கும். வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த 2-3 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.

ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் சண்டிகர் பகுதிகளில் கனமழை பெய்யும். மலைப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு இந்தியாவிலும் புயல்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளன.

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும். எப்போதும் ஜூன் முதல்வாரம் தொடங்கும் இந்த மழை இந்த முறை மே இறுதியில் தொடங்க உள்ளது. இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+