பீஸ் பீஸாயிடுச்சே.. "யாராவது வாங்கப்பா" கெஞ்சிய தலைவர்.. திடீர்னு "அவரை" நாடிய ஓபிஎஸ்.. அட "ஞானோதயம்"

உச்சக்கட்ட குழப்பம் அடைந்துள்ள ஓபிஎஸ்ஸூக்கு, முக்கிய ஆலோசனை தந்துள்ளார் பண்ருட்டியார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.. எனினும், சில முக்கிய சிக்கல்கள் ஓபிஎஸ் டீமை கவ்வி உள்ள நிலையில், அது தொடர்பான செய்திகள் கசிந்து வருகின்றன.

ஓபிஸ்ஸை பொறுத்தவரை, நடக்க போகும் இடைத்தேர்தலில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாமலேயே இருந்தார்.. ஆனால், அவரது ஆதரவாளர்கள் ஒருசிலர் நேரடியாகவே சென்று பேசினார்களாம்.

"யுவராஜா போட்டியிட நேர்ந்தால், ஆதரவை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிவிடுவோம்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்தினால், அதற்கு மாற்றாக, நாமளும் வேட்பாளரை நிறுத்தியே ஆக வேண்டும், போட்டியிடாமல் போனால், நம்மை பலவீனமாக நினைத்துவிடுவார்கள்" என்று எடுத்து சொல்லி உள்ளனர்.

முதலியார்

முதலியார்

இதற்கு பிறகுதான், ஓபிஎஸ் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தே யோசித்தாராம்.. இன்னும் சொல்லப்போனால், ஓபிஎஸ்ஸைவிட, இந்த இடைத்தேர்தலில் அதிகமாக ஆர்வம் காட்டுவது அவரது 2 மகன்களில் ஒருவர்தான் என்றும் சொன்னார்கள்.. அதுமட்டுமல்ல, புது ஐடியா ஒன்றையும் ஓபிஎஸ்ஸுக்கு அவரது ஆதரவாளர்கள் தந்துள்ளது.. அதன்படி, கவுண்டர் சமுதாயம் அல்லாத ஒரு வேட்பாளரை அதாவது "முதலியார்" வேட்பாளர் ஒருவரை, இடைத்தேர்தலில் முன்னிறுத்தினால், வாக்கு சதவீதத்தை ஓரளவு பெறலாம் என்று சொன்னார்களாம்.

 ராமலிங்கம் சாய்ஸ்

ராமலிங்கம் சாய்ஸ்

காரணம், கொங்கு சமுதாய ஓட்டுக்கள் என்பது எடப்பாடிக்கு கிட்டத்தட்ட 12 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், பிற சமூகத்தினரின் வாக்குகளை பெற்று, வெற்றியை சுலபமாக்கிவிடலாம் என்பதே ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் சொன்ன கணக்கு என்கிறார்கள்.. இதற்குபிறகுதான், இடைத்தேர்தலில் போட்டி என்பதையே ஓபிஎஸ் அறிவிக்க நேர்ந்துள்ளது.. ஓபிஎஸ் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்காதே என்ற கலக்கம் எடப்பாடி டீமுக்கு வந்துள்ளதால், அவரது அணியில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்... கிட்டத்தட்ட இதே மாதிரியான குழப்பம்தான், ஓபிஎஸ்ஸுக்கும் வேறு வகையில் வந்துள்ளதாம்.

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவிக்கும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் ஓபிஎஸ்சுக்கு இப்போது வரை தகுதியான வலிமையான வேட்பாளர் கிடைக்கவில்லையாம்.. இதனால், ஒவ்வொருவருக்கும், ஃபோன் போட்டு, "போட்டியிடுங்கள்" என சொல்வதை தீவிரப்படுத்தியிருக்கிறாராம்.. ஆனால், யாருமே ஓபிஎஸ்சின் விருப்பத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார்கள்.. இந்த நிலையில், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்பட பலரிடமும் ஆலோசித்தார் ஓபிஎஸ். அவர்களிடமிருந்தும் நல்ல பதில் கிடைக்கவில்லை.

 பண்ருட்டியார்

பண்ருட்டியார்

இறுதியில் வேறு வழியில்லாமல், நேற்றிரவு மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பேசியிருக்கிறார் ஓபிஎஸ். அப்போது, 30-ந்தேதி எடப்பாடியை மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதால் அது வரையில் பொறுத்திருப்போம். நீதிமன்றத்தின் கருத்து என்னவாக வரும் என்பதை பார்த்து முடிவு செய்யலாம். தனித்து போட்டியிடுவோம் என அண்ணாமலை சொன்னதை நாம் நம்பியிருக்கக் கூடாது... நம்பாமல் இருந்திருந்தால், வேறு வழியை நாம் ஆராய்ந்திருக்கலாம். அதாவது, வேட்பாளரை அறிவிக்க வேண்டிய சூழல் வந்திருக்காது" என்று சொன்னாராம் பண்ருட்டியார்..

 நியூ சின்னம்

நியூ சின்னம்

பாஜக ஆதரவு யாருக்கு என்று உறுதியாக தெரியாத நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு தற்போது கலக்கம் சூழ்ந்துள்ளதாக தெரிகிறது.. ஒருவேளை 2 பேருக்குமே ஆதரவு என்று சொல்லிவிட்டால், இது ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் என்கிறார்கள்.. அல்லது, பாஜக போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டாலும், ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி என்கிறார்கள்.. அந்தவகையில், பாஜக எடுக்க போகும் முடிவு, எடப்பாடி தரப்புக்கு சாதகமாகிவிடும் சூழலில், என்ன செய்வது என்று கையை பிசைந்து நிற்கிறாராம்.. அதுமட்டுமல்ல, கொங்குவில் குறிப்பாக, இடைத்தேர்தல் நடக்க போகும் தொகுதியில் ஓபிஎஸ்ஸுக்கு பெருத்த செல்வாக்கு இல்லாத சூழலில், புது சின்னத்தை நாடும் சூழலில், வாக்குகள் எந்த அளவுக்கு கிடைக்கும் என்ற கலக்கமும் உள்ளதாக தெரிகிறது.

 கையை பிசைந்து

கையை பிசைந்து

தேர்தலில் போட்டியிடாமலும் இருக்க முடியாமல், விலகவும் முடியாமல், சின்னத்தையும் பெற முடியாமல், வேட்பாளரையும் அறிவிக்க முடியாமல், பாஜகவின் நிலைப்பாடும் தெரியாமல், ஒட்டுமொத்தமாக குழம்பி உள்ளதாக தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், இதனிடையே, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி எடப்பாடி தரப்பு, சுப்ரீம்கோர்ட்டை நாடியுள்ள நிலையில், சென்னையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்..

 இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்

தங்கள் தரப்பு வேட்பாளர் தேர்வு, விருப்ப மனு பெறுவது உள்ளிட்ட விஷயங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதுமட்டுமல்ல, இரட்டை இலை சின்னத்தை பெற ஓபிஎஸ்ஸும் மும்முரம் காட்டுவதாகவும், சுப்ரீம்கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.. கடந்த இரு தினங்களாக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆலோசனை நடத்திய நிலையில், இப்போது ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+