ஜான் பாண்டியன் புட்டு புட்டு வச்சிட்டாரே.. "சாராய ஆலை அதிபர் யார்னு தெரியாதா'.. கோட்டை வரை போயிருச்சே
சென்னை: தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. அத்துடன் சில கேள்விகளையும், முன்வைத்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் ஜான் பாண்டியன் சொன்னதாவது: "ஏழை எளிய மக்களை கொலை செய்து கொண்டிருக்கிறது இந்த அரசு.. ஒட்டுமொத்த மக்களும், மதுவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சொன்னாலும்கூட, தமிழ்நாடு அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது..

ஜான்பாண்டியன் ஆவேசம்: இனிவரும் காலத்தில் மதுவை குறைப்போம் என்று சொன்னார்கள்.. ஆனால், இன்றுவரை மதுஒழிப்பு இன்றுவரை நடைபெறவில்லை.. அதனால், ஏற்படுகின்ற சங்கடங்கள்தான் இந்த கள்ளச்சாராய விவகாரம்..
இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் கீழ்மட்ட அதிகாரிகள் மட்டுமே சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.. இதுக்கு காரணமான உயர் அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.. இதை நாங்கள் அரசிடம் கேட்டுக் கொள்கிறோம்.. மதுவை மொத்தமாக அழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்..
ஒன்று சேர வேண்டும்: இதுபோலவே வேங்கைவயல் விவகாரத்தில் யார் அந்த காரியத்தை செய்தது என்பது அரசுக்கு நன்றாக தெரியும்.. ஆனால், அவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு, அந்த கிராம மக்களே அந்த காரியத்தை செய்தார்கள் என்று சொல்லி, விஷயத்தை மூடி மறைக்க பார்க்கிறார்கள். இது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற இழிவுகள் எல்லாம் தமிழகத்தில் நடக்க கூடாது என்றால், மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.. மதுவிலக்குக்காக வீதிகளில் இறங்கி போராடக்கூடிய நிலை எப்போது ஏற்படுகிறதோ, அப்போதுதான் இதை அரசு கவனத்தில் கொள்ளும்..
இறந்துபோன குடும்பத்துக்கு 10 லட்சம் தருகிறார்கள் என்றால், இது எவ்வளவு கேவலமான நிலை? ஒரு குடிகாரனுக்கு 10 லட்சம் என்று சொன்னால், விபத்தில் இறந்தவருக்கு இந்த அரசு என்ன செய்கிறது? அரசு அதிகாரிகள், வேலையில் இருக்கும்போது இறந்துவிட்டால், அவர்களுக்கு எத்தனை லட்ச ரூபாய்கள் தருகிறார்கள் என்று எல்லாருக்குமே தெரியும்.. ஆனால், இப்படி குடித்து இறந்துபோனவருக்கு 10 லட்சம் என்பது கண்டனத்துக்குரியது. இதை தமிழக அரசு செய்யக்கூடாது.. இது குடிகாரர்களை ஊக்குவிப்பதற்கு முன்னுதாரணமாகிவிடும்..
மதுவிலக்கு தேவை: மதுவிலக்கு இருந்தாலே வன்முறைகள் நடக்காது.. இதை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.. ஆனால், இதுக்காக பதவி விலக வேண்டும் என்று சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது.. இது கண்டனத்துக்குரியது.. அவ்வளவுதான்.. அதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் இருந்து விலக சொல்வது தவறு.., அப்படி பார்த்தால், இந்தியாவில் உள்ள அத்தனை அமைச்சர்களும் பதவி விலக நேரிடும்..
சாராய ஆலைகளை வைத்துக் கொண்டு, நிறைய கோடி ரூபாய் கொள்ளையடித்து சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, மக்களை பணயம் வைக்கிறார்கள்.. சாராய ஆலைகளை நிரந்தரமாக மூடினாலே, முக்கால்வாசி பிரச்சனை இங்கே தீர்ந்துவிடும்.. இப்படித்தான், மதுவிலக்கை படிப்படியாக கொண்டு போக முடியும்.
அதேபோல, கள்ளச்சாராயத்தை விற்பதற்கு காரணமாக, சில அதிகாரிகளும் இருக்கிறார்கள்.. இந்த விஷயத்தை பொறுத்தவரை, சில அதிகாரிகளுக்கு கையூட்டு பணம் தந்துதான், கள்ளச்சாராயத்தை விற்றுள்ளார்கள்.. அதை அவர்களே ஒப்புதல் வாக்குமூலமாக சொல்கிறார்கள்.. அதனால்தான், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாராய ஆலைகள்: திமுகவுக்கு நெருக்கமானவர்களே அந்த ஆலைகளை வைத்திருக்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளில் எத்தனையோ பேர் சாராய ஆலைகளை வைத்திருக்கிறார்களே? அதனால், அந்த ஆலைகளின் லைசன்ஸ்களை முதல்வர் கேன்சல் செய்ய வேண்டும்.. அதேபோல, டாஸ்மாக்கை திறந்து வைப்பது அரசுதான், அரசு செய்வது தவறு சொல்லி கொண்டிருப்பதைவிட, மக்களும் திருந்தணும்.. உடலுக்கு கேடு என்று தெரிந்தும், ஏழை மக்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். மதுவைவிட கஞ்சா புழக்கம்தான் அதிகமாகி உள்ளது..
கடந்த கால அரசிலும் கள்ளச்சாராயமும், கஞ்சா நடமாட்டமும் இருந்தது.. இல்லவே இல்லை என்று நாம் சொல்ல முடியாது.. ஆனால், இந்த ஆட்சியில் அதிகமான புழக்கத்தில் இவைகள் உள்ளன.
வலுவான கூட்டணியில் உள்ளவர்கள், யாராவது இந்த கள்ளச்சாராயம் பற்றி பேசறாங்களா? வேங்கை வயல் விஷயத்தை பேசறாங்களா? பேட்டி மூலம் ஒருத்தரும் வாய் திறக்கறதே இல்லை.. தவறு செய்தால் கண்டிக்கணும்தானே? இதுக்கு பேர்தான் கூட்டணியா? கூட்டணி தர்மம் என்பதை நியாயத்தை சுட்டிக்காட்ட வேண்டும், தவறு செய்பவர்களை சுட்டிக்காட்ட வேண்டும்.. நான் எந்த கூட்டணியில் இருந்தாலும், தப்பு என்றால் உடனே அதை வெளிப்படையாக சொல்லிடுவேன். இப்படி யாரையாவது சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.. சொல்ல மாட்டாங்க.. எதிர்த்து பேசிவிட்டால் சீட் தர மாட்டாங்களே என்ற பயம்தான்..
களப்பணிகள்: தேர்தல் சமயத்தில் கூட்டணி பற்றி சொல்வோம்.. இப்போதே சொல்ல முடியாது.. காலச்சூழலை பொறுத்ததுன் கூட்டணியை சரியாக சொல்ல முடிடியும்.. களப்பணிகளை நடத்தி வருகிறோம்.. நவம்பர் 19ம் தேதி, சங்கரன்கோவிலில் மாநாடு நடத்தபோகிறோம்..
ஜெயலலிதா மரணவிவகாரத்தை, ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்தார்களே.. சட்டசபையிலும் அறிக்கை தாக்கல் செய்தார்களே.. ஆனால், அதற்கு பிறகு, என்ன நடவடிக்கை எடுத்தது இந்த அரசு? அப்படின்னா அந்த கமிஷனை எதுக்கு போடறீங்க? இதுக்கு இத்தனை லட்சம் ரூபாய் சம்பளம் தந்தீங்க? சொன்னதை செய்வோம்ன்னு சொன்னீங்களே, இதுவரை யார் மீது நடவடிக்கை எடுத்தீங்க..
புகார்கள்: ஆக, எந்த புகார்கள் என்றாலும், எந்த துறையாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்குகிறது.. காரணம், நாளைக்கு அவங்க மேலேயே தவறுவந்துவிட்டால், இவங்க நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்பதற்காக, இதெல்லாம் ஒரு முன்னுதாரணமாக இருக்குமோ என்று நான் சந்தேகப்படறேன். அரசே தயங்கினால் நாம் யார்கிட்டதான் போய் புகார் தர்றது?" என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினார் ஜான்பாண்டியன்.
இதனிடையே, ஜான் பாண்டியன் வரும் தேர்தல்ல் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற சலசலப்பும் ஒருபக்கம் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.. கடந்த 2019-ல் அதிமுக + பாமக + தேமுதிக + தமாகா + புதிய தமிழகம் + புதிய நீதிக்கட்சி + என்ஆர் காங்கிரஸ் + இப்படி 7 கட்சிகள் ஒன்றுசேர்ந்துதான் கூட்டணி வைத்தார்கள்.. இத்தனைக்கும் ஜான்பாண்டியன், பூவை மூர்த்தி போன்றோர்களும் அதிமுக கூட்டணியுடன்தான் பயணித்தனர்.
யாருடன் கூட்டணி: ஆனால், இப்போது இந்த அளவுக்கு வலுவான கூட்டணி அமையுமா என்று தெரியவில்லை.. அதேபோல, பாமக + தேமுதிக இவர்கள் 2 பேரும் என்ன நிலைப்பாடு எடுக்க போகிறார்கள் என்பதும் உறுதியாக தெரியவில்லை.. எனினும், பாஜகவுடன் இணைந்து பயணிப்பார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, இரட்டை இலை சின்னத்தை வைத்திருப்பவர்களுக்குதான் ஆதரவு என்று ஜான் பாண்டியன் கூறியிருந்தார். ஆனால் உடனே தன் நிலைப்பாட்டை மாற்றியிருந்தார்.
"இடைத்தேர்தல் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை தான் போய்க்கொண்டிருக்கிறது தவிர, யார் நிற்கப் போகிறார்கள் என்பது பற்றியெல்லாம் முடிவு எடுக்கப்படவில்லை. பாஜகவும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், பாஜக முடிவு செய்த பிறகு தான் நாம் முடிவைச் சொல்ல முடியும்" என்று கூறியிருந்தார். ஜான் பாண்டியனின் இந்த கருத்து, அந்த நேரத்தில் எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் சலசலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications