ஜெ. கூட தப்பிக்க முடியாத வழக்கு.. பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு! அடுத்த அமைச்சர் யார்? திமுகவில் பரபர
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு திமுகவிற்கு உள்ளே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கு: இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017 ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான் குறிப்பிட்டார்.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அமைச்சர் பொன்முடி மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்வதாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை எனவும் வாதிட்டார்.
பொன்முடி வழக்கு: குறிப்பிட்ட காலக் கட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார். இருதரப்பு வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து நவம்பர் 27ஆம் தேதி வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
தீர்ப்பு என்ன?: இந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அதில்,
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை வரும் 21- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பொன்முடி, 64.90 சதவீத அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக உள்ளே பரபரப்பு : அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு திமுகவிற்கு உள்ளே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாம். பெரிய விவாதத்தை திமுக உள்ளே இந்த தீர்ப்பு ஏற்படுத்தி உள்ளதாம்.
அப்போது ஜெயல்லிதா 66 கோடி சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். இப்போது இறந்தால் கூட அவர் ஏ1 என்றுதான் அர்த்தம். சசிகலா கூட இதே வழக்கில் ஏ2 வாக சென்றவர். இன்று அதே சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி ரூ. 1.76 கோடி சேர்த்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சொத்து அளவு வேறு என்றாலும் குற்றம் ஒன்றே. வழக்கு என்பது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்குதான் என்ற பேச்சு திமுகவில் எழுந்துள்ளதாம்.
இதனால்தான் கண்டிப்பாக இதில் மேல்முறையீடு செய்தாலும் தப்பிக்க முடியாது என்றே திமுக தரப்பில் நிர்வாகிகள் இடையே விவாதம் எழுந்துள்ளதால். இதனால்தான் அமலாக்கதுறை இவரை கைது செய்யாமல் விட்டு விட்டதோ சுப்ரீம் கோர்ட் ஜெவை விடவில்லை அதனால் பொன்முடியும் தப்பிக்க முடியாது.. அவரின் பொறுப்பிற்கு வரப்போகும் அமைச்சர் யார் என்ற விவாதம் திமுகவில் எழுந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications