Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சக்ஸஸ்".. சாதித்த வைகோ.. மதிமுக தலைமைக்கழக செயலாளரானார் துரை வையாபுரி.. இனிதான் பிரச்சனையே

மதிமுக பொதுக்குழு கூட்டம் வைகோ தலைமையில் இன்று கூடுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: உட்கட்சி பூசல், அதிருப்திகள், சலசலப்புகளுக்கு மத்தியில் மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று கூடிய நிலையில், மதிமுக தலைமைக்கழக செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. துரை வையாபுரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

துரை வைகோவுக்கு மிக முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்ப்புகளும் வலுவாகி உள்ளன.

அன்று திமுகவில் கருணாநிதியிடம் வாரிசு அரசியலை எதிர்த்துதான், கட்சியைவிட்டு வெளியே வந்தார் வைகோ.. இப்போது அதே வாரிசு அரசியலை மதிமுகவிலும் உருவாக்குகிறாரே என்பதே பலரது வாதமாக உள்ளது.

 துரை வைகோ

துரை வைகோ

ஏற்கனவே மதிமுக மாவட்ட செயலாளர்கள் 4 பேர் போர்க்கொடி தூக்கிய நிலையில், பல்வேறு மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் மதிமுகவுக்கு எதிரான மனநிலைமையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று மதிமுக பொதுக்குழு கூடியது.. இந்த பொதுக்குழுவில்தான், தலைமை நிலைய செயலராக உள்ள தன் மகன் துரைக்கு செயல் தலைவர் அல்லது துணை பொதுச்செயலர் பதவி வழங்க வைகோ யோசித்து வருவதாகவும், அதற்கேற்ற வகையில் கட்சி சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

 துரை வையாபுரி

துரை வையாபுரி

கட்சியின் மா.செ.க்கள் மதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரிடமும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், இதை வைகோ எப்படி சமாளிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.. ஒருவேளை அதிருப்திக்குள்ளாகி இருக்கும் மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிப்பார்களா? அல்லது அதிருப்தியாளர்களையும் கூட்டத்தில் பங்கேற்க வைத்து அவர்களை சரிகட்ட வைகோ முயற்சிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.

 அதிருப்தியாளர்கள்

அதிருப்தியாளர்கள்

ஆனால், அதிருப்தியாளர்களுக்கும் இன்றைய பொதுக்குழு கூட்டத்துக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக துரை வைகோ நேற்று தெரிவித்திருந்தார். எனவே, இன்று நடக்க போகும் கூட்டத்தில் அந்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியபடியே இருந்தது. துரை வைகோவுக்கு எதிராக செயல்படும் மூத்த மாவட்ட செயலர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட அதிருப்தி நிர்வாகிகள் இன்று கூடும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் நீக்கப்படுவர் என்றும் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெடித்து வந்தன.

 வைகோ தலைமை

வைகோ தலைமை

இன்று காலையில், மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையில், சென்னை அண்ணாநகரில் கூடியது. பொதுக்குழு கூட்டம் கூடியது.. துணை பொதுச் செயலர்களாக ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், தலைமை நிலைய செயலராக துரை வைகோ, தணிக்கை குழு உறுப்பினராக சுப்பையா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

 போட்டியின்றி தேர்வு

போட்டியின்றி தேர்வு

உள்ளனர். துரைக்கு ஆதரவாளர்களாக உள்ள மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் மட்டும் பொதுக்குழுவில் பேச அனுமதிக்கப்பட உள்ளனர்... மதிமுக தலைமைக்கழக செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. துரை வையாபுரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது... மேலும், மதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், எதிர்பார்த்தபடியே மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.. இதனால் இவர்கள் மீது கட்சி நடவடிக்கை பாயுமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+