கோயம்புத்தூர் அப்படியே மாறுதே.. குவியும் எம்என்சிக்கள் முதலீடு.. இத்தனை கோடியா? வந்தது நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 உலக முதலீட்டார்கள் மாநாட்டிற்கு முன்னதாக பெரிய MNC நிறுவனங்களிடமிருந்து 2,000 கோடி முதலீடுகளை கோயம்புத்தூர் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனவரி 2024-இல் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில் பல முக்கியமான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டை முன்னாள் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான விவரங்களை வெளியிட்டார். முக்கியமான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

Huge investments are coming towards Coimbatore: Many MNCs are showing interest in the city

அதன்படி ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பாராட்டப்படும் தமிழ்நாடு இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.

2022ம் வருடம் தமிழ்நாடு மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.முதல்வர் ஸ்டாலின் இந்த முதலீடுகளை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில்தான் இந்த முறை சென்னையில் மட்டுமின்றி கோவையிலும் பல்வேறு முக்கிய முதலீடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

2024 TN Global Investor கூட்டத்திற்கு முன்னதாக பெரிய MNC நிறுவனங்களிடமிருந்து 2,000 கோடி முதலீடுகளை கோயம்புத்தூர் பெற உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் 48 MSME களில் இருந்து 571 கோடி முதலீடுகளையும் கோவை பெற வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் முன் செய்யப்பட உள்ள ஒப்பந்தங்கள் ஆகும். மாநாடு நடக்கும் நாளில் இதை விட பெரிய அளவில் முதலீடுகள் குவியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2 வருடங்களாகவே கோவையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. அங்கே தொழில் செய்வதற்கு ஏதுவான சூழல் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பாக கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாநாடு நடைபெற்றது. மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. அப்போதும் கோவையில் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+