"பெருஸ்ஸா மாட்டுதே திமிங்கலம்".. எடப்பாடிகிட்ட "அவரும்" வர்றாரா.. இருக்கிற களேபரத்தில் இதுவேற புதுசா
ஓபிஎஸ் தரப்பில் சில முக்கிய புள்ளிகள் எடப்பாடி தரப்புக்கு வரப்போவதாக சொல்கிறார்கள்
சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்த சறுக்கல்களை சந்தித்துவரும் நிலையில், ஓபிஎஸ் கூடாரம் அளவுக்கு அதிகமாகவே அதிர்ச்சியில் உள்ளதாம்.. இந்த அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும்விதமாக, இன்னொரு தகவல் வெளியாகி டென்ஷனை கூட்டி வருகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், அடுத்து ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது..
புதிதாக ஒரு கட்சியை துவக்க போகிறாரா? என்ற கேள்வியை முதல் ஆப்ஷனாக வைத்து வாதங்கள் கிளம்பி உள்ளன.. அல்லது பாஜகவுடன் ஓபிஎஸ் இணைய போகிறாரா? அல்லது ஒதுங்கியிருந்து பாஜகவுக்கு ஆதரவு தந்து, தேர்தல்களையும் சந்திக்க போகிறாரா? என்கிற கேள்விகளும் வலம்வருகின்றன..

லாஸ்ட் சான்ஸ்
மற்றொருபக்கம், சட்டப்போராட்டத்தையும் தீவிரப்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது இப்போதைக்கு ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் கடைசி சான்ஸ் தேர்தல் ஆணையம் ஒன்று மட்டும் தான் என்கிறார்கள். அதிலும், ஒருவேளை எடப்பாடி பழனிசாமியின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், ஓபிஎஸ்ஸின் அரசியல் முடிவுக்கு வரக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், மருது அழகுராஜ் உள்ளிட்ட சீனியர்கள் மட்டுமே உள்ள நிலையில், மெல்ல மெல்ல ஓபிஎஸ்ஸின் கூடாரமும் கலைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.

மவுசு எகிறுது
4 நாளைக்கு முன்புகூட, ஈரோடு மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையான அதிருப்தி காரணமாக, விலகிவிட்டனர்.. அத்துடன் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கே சென்று அவர்பக்கம் இணைந்தும்விட்டனர்.. கட்சிக்கு தொடர்பில்லாத நபரை வேட்பாளராக அறிவித்தும், அறிவித்த வேட்பாளரையும் திரும்ப பெற்றதால் அதிருப்தி என்பதாலேயே இவர்கள் விலகியதாக காரணம் சொன்னார்கள்.. மேலும், செலவிட்ட தொகையை தர மறுப்பதாகவும் இன்னொரு குற்றச்சாட்டும் எழுந்தது. இவர்களை தவிர, இன்னும் 106 பேர் ஓபிஎஸ் டீமில் இருந்து விரைவில் விலகக்கூடும் என்றும் அப்போதே தகவல்கள் பரபரத்தன. இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடிக்கு நேற்றைய தினம் "மவுசு" எகிறி உள்ளது.

ராஜதந்திரம்
இதைப்பயன்படுத்திதான், அடுத்தக்கட்ட ராஜதந்திரத்தை எடப்பாடி டீம் அவிழ்த்துவிட்டுள்ளதாம். ஓபிஎஸ் மீதான நம்பிக்கையை அவரது ஆதரவாளர்கள் மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கி உள்ள நிலையில், இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு, எடப்பாடி தரப்பு ஓபிஎஸ் கூடாரம் உள்ளே நுழைந்துள்ளதாம்.. அதிருப்தியிலும், தங்கள் எதிர்காலம் என்னாவது? என்ற கலக்கத்திலும் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தொடர்பு கொள்ளும் எடப்பாடி தரப்பு மா.செ.க்கள் தொடர்பு கொண்டு பேசிவருகிறார்களாம்..

கலையும் கூடாரம்
அதாவது, "ஓபிஎஸ்சுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை. அவர் பாஜகவில் சேர வேண்டும் அல்லது தனிக் கட்சி துவங்க வேண்டும். இந்த இரண்டில் எது நடந்தாலும் அது சூசைட்டுக்கு சமம்... அவருக்கே எதிர்காலம் இல்லாத போது, உங்களுக்கும் இருக்காது. அதனால், மறுபடியும் நம்ம கட்சிக்குள் வந்து விடுங்கள். எடப்பாடியிடம் பேசி உங்களுக்கான முக்கியத்துவத்தை கிடைக்கச் செய்கிறோம். இப்போதே முடிவு எடுத்தால் அது உங்களுக்கு நல்லது. இனியும் ஓபிஎஸ்சை நம்பி ஏமாறாதீர்கள்" என்று பேசி வருகின்றனர். எடப்பாடி உத்தரவின் பேரிலேயே இந்த முயற்சியை அவரது மா.செ.க்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பதாக மா.செ.க்கள் சொல்கின்றனர்.. ஏற்கனவே மண்குதிரையை நம்பிவிட்டோமே என்று கலங்கிவரும் நிலையில், வலிய வரும் வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்றும் ஓபிஎஸ் டீமின் முக்கிய தலைகள் அலர்ட் ஆகி வருகிறார்களாம்.. அதனால் விரைவில் எடப்பாடியை நோக்கி கிளம்பி வருவார்கள் என்றும், ஓபிஎஸ்சின் கூடாராம் காலியாகும் என்றும், அதீத மிதப்பில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. ஏற்கனவே ஒருமுறை மூத்த தலைவர் வைத்திலிங்கத்தை, தங்கள் பக்கம் கொண்டுவரும் முயற்சியை எடப்பாடி தரப்பு எடுத்ததாக செய்திகள் கசிந்ததை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

ஓவர் கான்ஃபிடன்ஸ்
அதுமட்டுமல்ல, இதுபோன்ற வியூகங்கள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அரசியல் தளத்தில் எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் பெறுவதுடன், ஒரு பெரிய தேர்தலில், அதாவது பொதுத்தேர்தல் போன்ற ஒரு தேர்தலில் வெற்றிபெற்றுக் காண்பிக்கும்போதுதான் மக்களின் அங்கீகாரம் எடப்பாடிக்கு கிடைத்ததாக சொல்ல முடியும் என்று தமிழகத்தின் அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்லி கொண்டிருப்பதையும், நாம் இங்கே மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. அடுத்த என்னநடக்க போகிறது? பார்ப்போம்..!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications