அண்ணாமலைக்கு இடி.. பாஜகவில் பெரிய பஞ்சாயத்து.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய முருகன், தமிழிசை.. ஏன்?
சென்னை: பாஜகவில் அண்ணாமலைக்கு பெரிய சிக்கல். பாஜக மோதல் பற்றி டெல்லிக்கு தமிழிசை சௌந்தரராஜன், எல் முருகன் புகார் அளித்துள்ளனர். டெல்லி அனுப்பிய காசுக்கு அண்ணாமலை கணக்கு காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்துள்ளது. ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், கோவையில் அண்ணாமலையால் வேலையே செய்ய முடியவில்லை. திமுக - அதிமுக அங்கே டீம் போட்டது. ஆனால் கடைசி 3 நாட்களில் அங்கே அதிமுக பிரச்சாரம் செய்யவே இல்லை. அண்ணாமலையால் காசு கூட கொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு திமுக - அதிமுக களத்தில் இறங்கி பணிகளை செய்தனர். நகர்ப்புறங்களில் மட்டுமே அண்ணாமலை பணம் கொடுக்க முடிந்தது.
இதனால்தான் இப்போது 1 லட்சம் வாக்காளர்களை காணவில்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார். கையில் ஓட்டு போட்ட முத்திரையோடு வாக்களித்தனர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கோவையில் 1 லட்சம் வாக்குகள் காணவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். அதிமுக பூத் லெவலில் சரியாக வேலை பார்க்கவில்லை. சென்னையில் அதிமுகவின் பூத் கம்மிட்டிகள் எல்லாம் மிக மோசமாக செயல்பட்டன.
திமுக இந்த தேர்தலை சாதாரண தேர்தலாக பார்க்கவில்லை. இதை அக்னி பரீட்சையாக பார்த்தது. இதில் 40 தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு இருந்தது. இன்னொரு பக்கம் பாஜக நாங்கள்தான் 2ம் இடம்.. அதிமுக இரண்டாம் இடம் கிடையாது என்றெல்லாம் பிக் லை.. அதாவது பெரிய பொய்யை பாஜக சொன்னது. நாங்கள் வளர்ந்துவிட்டோம்.. நாங்கள்தான் தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்று பாஜக கூறியது.
இதை திமுக தீவிரமாக எதிர்கொண்டது. அதிமுக பாஜகவை அட்டாக் செய்யவே இல்லை. யார் யாரையோ வேட்பாளர்களாக போட்டோ ஏதேதோ பிரச்சாரங்களை செய்தனர். பெரிதாக அதிமுகவில் யாரும் பிரச்சரம் செய்யவில்லை. இங்கே உதயநிதி, ஸ்டாலின், ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தனர். எதிரே பாஜகவில் அண்ணாமலை, ராஜ்நாத் சிங், அமித் ஷா, மோடி, நிர்மலா சீதாராமன் என்று பலரும் பிரச்சாரம் செய்தனர். இதை திமுகதான் எதிர்கொண்டது.
சென்னையிலும் பாஜக பெரிதாக பணிகளை செய்யவில்லை. காரணம் பாஜகவிற்கு மேலிடத்தில் இருந்து ரூ. 1000 கோடி அனுப்பப்பட்டது. நயினார் நாகேந்திரன் கூட மாட்டினார். இப்படித்தான் அந்த பணம் மாட்டியது. அதெல்லாம் மேலிடம் அனுப்பிய பணம். மேலிடம் அனுப்பிய பணத்தை எப்படி பிடிக்க முடியும். பாஜக டீம் இந்த பணத்தை அடித்துக்கொண்டது. பாதி பணம் அண்ணாமலை அன் கோவிற்கு சென்றுவிட்டது.
இந்த பணம் கீழே செல்லவில்லை. தொகுதி பணிகளுக்கு செல்லவில்லை. வேட்பாளர்கள், நிர்வாகிகள் பணத்தை அடித்துவிட்டனர். பூத் கமிட்டி பேட்டா கூட செல்லவில்லை. இதெல்லாம் பாஜகவில் பெரிய பஞ்சாயத்து. தமிழ்நாடு முழுக்க இதனால் பாஜகவில் பஞ்சாயத்து. நேற்று ஒரு கூட்டத்திற்கு அழைத்தார்கள். அது நடந்து இருந்தால் அடிதடி வெட்டுக்குத்தே நடந்து இருக்கும். அப்படி நடக்காமல் போய்விட்டது.
பாஜகவில் அண்ணாமலைக்கு பெரிய சிக்கல். பாஜக மோதல் பற்றி டெல்லிக்கு தமிழிசை சௌந்தரராஜன், எல் முருகன் புகார் அளித்துள்ளனர். டெல்லி அனுப்பிய காசுக்கு அண்ணாமலை கணக்கு காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications