ஓட்டல்கள், வீடுகளில் கரண்ட் பில்லில் மாற்றம்? டைம் ஆகுமாமே.. அதுக்குள்ள தமிழக மின்சார வாரியம் அதிரடி
சென்னை: மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க உதவும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.. இதையடுத்து தமிழக மின்வாரியத்தின் பணிகளும் வேகமெடுத்துள்ளன.
தமிழகத்தில், மின் மீட்டர்களில் கணக்கெடுப்பதில் சில குளறுபடிகள் நடப்பதாகவும், பல இடங்களில் கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டியபடியே உள்ளனர். அதாவது, 2 மாதத்தையும் தாண்டி கணக்கெடுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதாயிருக்கிறது என்கிறார்கள்.

மற்றொருபுறம், மின்பயன்பாட்டை கணக்கெடுக்க காலதாமதம் ஏற்படுவது, மின்பயன்பாட்டைக் குறைத்து கணக்கெடுப்பது போன்ற முறைகேடுகளால் மின்வாரியத்துக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
ஊழியர்கள்: அதனால்தான், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழக அரசு முன்னிலைப்படுத்தியது. அதன்படி, ஸ்மார்ட் மீட்டர்களே ரீடிங் எடுத்துவிடும்.. ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டியதில்லை, அத்துடன், கட்டண விவரமும் SMS மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்பட்டுவிடும்..
இந்த வசதிகள் உள்ளதால்தான், தமிழகம் முழுவதும் அனைத்து இணைப்புகளிலும் பொருத்த 3.03 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்கான டெண்டர் கடந்த வருடம் கோரப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
மின் மீட்டர்கள்: அதுமட்டுமல்ல, டெண்டரில் தேர்வுசெய்யப்படும் நிறுவனம், மீட்டர்களை பொருத்துவது, தகவல்தொடர்பு வசதியை ஏற்படுத்துவது, ஒருங்கிணைப்பது, பராமரிப்பது என அனைத்து பணிகளையும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு உள்ளது.. எனவே, எப்படியும் ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், புதிய மின் இணைப்புகளுக்காக 30 லட்சம் மின் மீட்டர்கள் வாங்க மின்வாரியம் டெண்டர் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியாகி உள்ளது. அதாவது, ரூ.3.03 கோடி இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தவும், பராமரிக்கவும் தனியார் நிறுவனத்தைத் தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்ட நிலையில், 20 லட்சம் மின் மீட்டர்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
கட்டமைப்பு வசதிகள்: இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் சொல்லும்போது, "ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த சில அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டியுள்ளது. இதனால், இத்திட்டத்தை செயல்படுத்த இன்னும் சில காலம் ஆகும். அதேசமயம், புதிய மின் இணைப்புகளை வழங்க மீட்டர் தேவைப்படுகிறது. அதற்காக புதிய மீட்டர்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது'' என்றனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
இலவச மின்சாரத்துக்கு சிக்கல்? ரூ.20 ஆயிரம் கோடி ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவது ஏன்?












Click it and Unblock the Notifications