சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி
சென்னை: மத்திய அரசு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான புதிய காலாண்டிற்கு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் தற்போதைய நிலையையே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.. பிபிஎஃப் (PPF), சுகன்யா சம்ரித்தி போன்ற திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு பழைய வட்டி விகிதங்களின் படியே தொடர்ந்து லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.. அதே நேரத்தில், முன்னணி வங்கிகள் தங்களது ஏடிஎம் மற்றும் லாக்கர் கட்டண விதிகளில் சில புதிய மாற்றங்களை ஏப்ரல் 1 முதல் அமலுக்குக் கொண்டு வருகின்றன.. அதை பற்றிதான் சுருக்கமாக இங்கே பார்க்க போகிறோம்.
நாளை ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள புதிய நிதியாண்டின் முதல் காலாண்டில், மத்திய அரசு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் தற்போதைய நிலையையே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

சிறுசேமிப்பு திட்டங்கள்
இது நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சேமிப்பை மட்டுமே நம்பியிருக்கும் மூத்த குடிமக்களுக்கு ஒரு நிம்மதியான செய்தியாக அமைந்துள்ளது. அதுவும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC) மற்றும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற பிரபலமான திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள், பழைய வட்டி விகிதங்களின் படியே தொடர்ந்து பலன்களை பெறுவார்கள்.
பொதுவாக, சிறு சாமானிய மக்களின் பாதுகாப்பான முதலீட்டு அரணாக சேமிப்பு திட்டங்கள் கருதப்படுகின்றன. ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் ஒருமுறை, அதாவது காலாண்டு அடிப்படையில், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றியமைக்கும்.
பணவீக்கம் மற்றும் வங்கி வட்டி விகிதங்களின் உயர்வைக் கருத்தில் கொண்டு, இம்முறை வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அரசு அதனை மாற்றாமல் அப்படியே தக்கவைத்துள்ளது.
நாளை முதல் சூப்பர் மாற்றம்
அப்படியானால் இதன் மூலம் நாளை ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலாண்டிற்கு, முதலீட்டாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த அதே லாபத்தைப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த அறிவிப்பின்படி, பிபிஎஃப் (PPF) திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டியும், சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டியும் தொடர்ந்து வழங்கப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
அதேபோல் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்களுக்கு 8.2 சதவீத வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது. பாதுகாப்பான முதலீடு மற்றும் வரிச் சலுகை ஆகிய இரண்டையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த திட்டங்கள் இப்போதும் ஒரு பெஸ்ட் சான்ஸாகவே உள்ளன. சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், நிலையான வருமானத்தை இது போன்ற அரசுத் திட்டங்கள் உறுதி செய்கின்றன.
இன்னொருபுறம், வங்கி துறையில் சில மேஜர் மாற்றங்கள் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகின்றன. நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி (HDFC) மற்றும் பொதுத்துறை வங்கியான பிஎன்பி (PNB) போன்றவை தங்களது சேவை விதிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளன.
குறிப்பாக, ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் மற்றும் வங்கி லாக்கர் பராமரிப்பு விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட இலவசப் பரிவர்த்தனை வரம்பைத் தாண்டும்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
லாக்கர் வசதி
லாக்கர் வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், புதிய ஒப்பந்த விதிகளைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் இந்த அதிரடி மாற்றங்கள் வாடிக்கையாளர்களின் மாதாந்திர செலவுகளில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதனால் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகை மற்றும் இதர சேவை கட்டணங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். சிறு சேமிப்பு வட்டி மாறாமல் இருப்பது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், வங்கிக் கட்டண உயர்வு வாடிக்கையாளர்களுக்குச் சற்று சவாலாகவே அமையும்...!!












Click it and Unblock the Notifications