Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுற்றுலா போன பெண்ணை நைனிடால் காட்டுக்குள் விடிய விடிய துரத்திய டாக்ஸி டிரைவர்! ஜிபிஎஸ் காட்டிய உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தராகண்ட் மாநிலத்தின் மலைப்பாதையில் சுற்றுலா சென்றுள்ளார் டெல்லியை சேர்ந்த 31 வயது பெண்.. அங்குதான் இந்த கொடுமை சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்ஸி டிரைவரின் பாலியல் அத்துமீறலில் இருந்து தப்பிக்க, அந்தப் பெண் இரவு முழுவதும் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கியிருந்து உயிர் தப்பியுள்ளார். இந்த செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

டெல்லியில் இருந்து சுற்றுலா வந்த அந்தப் பெண், கடந்த மார்ச் 5ம் தேதி நைனிடாலுக்கு செல்வதற்காக திட்டமிட்டிருந்தார். நள்ளிரவு 11 மணி அளவில் காத்கோடாமில் இருந்து நைனிடால் செல்வதற்காக ஒரு வாடகை காரை பிடித்தார்.

Nanital Delhi woman GPS

வாடகை கார் சுற்றுலா

அந்த டாக்ஸியை ஹல்த்வானியைச் சேர்ந்த தீபக் சிங் போரா (39) என்பவர் ஓட்டிச் சென்றார். மறுநாள் மார்ச் 6ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில், கார் நைனிடாலுக்கு இன்னும் 10 கி.மீ தொலைவில் உள்ள பல்டியாக்கான் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது டாக்ஸி டிரைவர் தீபக் சிங், திடீரென பிரதான சாலையிலிருந்து விலகி, ஆள் நடமாட்டமில்லாத பட்வா டங்கர் என்ற காட்டு பகுதிக்கு காரைத் திருப்பியுள்ளார்... ரூட் மாறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், டிரைவரிடம் உடனடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நைனிடால் அடர்ந்த காடு

இதனால் ஆத்திரமடைந்த டிரைவர், காரை நிறுத்திவிட்டு அந்த பெண்ணைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், பெண்ணிடமிருந்த செல்போனையும் பிடுங்கிக்கொண்ட அவர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.. இந்த இக்கட்டான சூழலில், எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று அந்த பெண் நினைத்தார்..

இதற்காக துணிச்சலுடன் ஓடும் காரில் இருந்து குதித்து அருகிலிருந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஓடியுள்ளார்... கீழே விழுந்ததில் உடம்பெல்லாம் காயமடைந்துள்ளது.. செல்போனும் கையில் இல்லாததால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியாமல் அந்தப் பெண் தவித்துள்ளார்.. ஆனால், காம வெறி பிடித்த அந்த டிரைவர் விடாமல் பெண்ணை துரத்தி கொண்டே ஓடிவந்தார்..

சுற்றுலா பெண்ணுக்கு பாலியல் தொல்லை

எனினும், அவரிடம் சிக்காமல் இருக்க அந்தப் பெண் இரவு, அங்கிருந்த ஒரு முட்செடிகளுக்கு நடுவில் பதுங்கி கொண்டார்.. இரவு முழுவதும் அடர்ந்த காட்டில் அந்த முட்செடிகளுக்கு இடையே விடிய விடிய பதுங்கியிருந்தார்.. பிறகு எப்படியோ சிரமப்பட்டு பட்வா டங்கர் கிராமத்தை அந்தப் பெண் சென்றடைந்தார். அங்கிருந்த உள்ளூர் பெண்கள் அவரை மீட்டு, தாலிட்டல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் நைனிடால் எஸ்எஸ்பி மஞ்சுநாத் டிசி தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் காரில் இருந்த ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் குற்றவாளியைத் தேடினார்கள்..

விடிய விடிய பயங்கரம்

தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தலைமறைவாக இருந்த தீபக் சிங் போராவை போவாலி பகுதியில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து பெண்ணின் செல்போன் மீட்கப்பட்டதுடன், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+