ராத்திரியானால் அட்டகாசம்.. தாங்க முடியாமல் தவித்த தேவி.. கத்தியை எடுத்து "அதை" கட் செய்த பாபு!
பிறப்புறுப்பை அறுத்து கொண்டுள்ளார் கணவன்
சென்னை: நைட் நேரம் ஆகிவிட்டால் கணவர் பாபுவின் தொல்லையை தேவியால் தாங்க முடியவில்லை.. இதனால் சண்டை வெடிக்கவும்.. கிச்சனுக்குள் ஓடிப்போய் காய் நறுக்கும் கத்தியை எடுத்து, தனது பிறப்புறுப்பை கட் செய்து கொண்டார் பாபு!
சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் பாபு.. இவரது மனைவி தேவி.. 35 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 10 வருடம் ஆகியும் குழந்தை இல்லை.
பாபுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் உள்ளது.. தினமும் வீட்டுக்கு வரும்போது போதையில்தான் வருவாராம்.. வந்தவுடன் தேவியிடம் தகராறு செய்வாராம்.. நாள்தோறும் இரவு நேரத்தில் சண்டை, சச்சரவு காரணமாக தேவி மனம் உடைந்துள்ளார்.

விவாகரத்து
அதனால் பாபுவை வெறுத்த தேவி, அவரை டைவர்ஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.. இதனால் சில தினங்களுக்கு முன்பு கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார். அப்போது பாபுவுடன் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளார்.

செம போதை
பிறகு நேற்று புத்தாண்டு என்பதால் ஓரளவு மனம் மாறினார் தேவி.. கணவனுடன் சேர்ந்து கொண்டாடலாம் என்று கிளம்பி பாபு வீட்டுக்கு வந்தார்.. சும்மாவே தண்ணி அடிக்கும் பாபு, புத்தாண்டு என்றதும் விடுவாரா.. தேவி வரும் நேரம் பார்த்து செம போதையில் இருந்துள்ளார். திரும்பவும் 2 பேருக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது.

கத்தி
"நான் இனிமேல் உங்ககூட வாழ மாட்டேன்.. டைவர்ஸ் பண்ணிட வேண்டியதுதான்.. என் அம்மா வீட்டுக்கே போறேன்" என்று கிளம்பினார்.. தேவி இப்படி சொன்னதை பாபு கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.. உடனே கிச்சனுக்குள் ஓடினார்.. அங்கிருந்த காய் நறுக்கும் கத்தியை எடுத்து, தன்னுடைய ஆணுறுப்பை அறுத்துக்கொண்டார்.

சிகிச்சை
பிறகு வலி தாங்க முடியாமல் கிச்சனில் இருந்தே அலறி துடித்தார்.. இந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து.. பாபுவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பாபுக்கு தீவிர சிகிச்சை நடந்துவருகிறது. அதேபோல இந்த சம்பவம் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications