35 வயசு சரிதா.. அந்த பக்கம் சுரேஷ்.. நடுவில் புகுந்த மாட்டுக்கறி வியாபாரி மதன்.. கடைசியில் விபரீதம்!

2வது மனைவியை கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புருஷன், குழந்தை என இருக்கும்போதே, இன்னொருவருடன் காதல் ஏற்பட்டு, 2வதாகவும் வாக்கப்பட்டார் 35 வயது சரிதா.. விளைவு கொடூர மரணம்..!

செனைனை ஆவடி அடுத்துள்ள பகுதியை சேர்ந்தவர் சரிதா.. 35 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. கணவர் பெயர் சுரேஷ்... இவர்களுக்கு செர்மிலி என்ற 7 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

சுரேஷ் இருக்கும்போதே, சரிதாவுக்கு மதன் என்பவர் மீது கவனம் திரும்பியது.. கள்ள காதல் மலர்ந்தது.. மதன் என்பவர் ஒரு மாட்டுக்கறி வியாபாரி.. 42 வயதாகிறது.. அவருக்கும் கல்யாணமாகிவிட்டது.. அலமேலு என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சரிதா

சரிதா

ஏற்கனவே கல்யாணம் ஆன இந்த 2 பேரும், மறுபடியும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.. மதனை நம்பி சுரேஷை விட்டுவிட்டு கழுத்தை நீட்டினார் சரிதா.. 2 வருடங்களுக்கு கல்யாணம் நடந்தது.. இருவரும் மேல்பாக்கத்தில் வசித்து வந்தனர்... இந்த புது தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது.. அந்த குழந்தையின் பெயர் மெகிலினா. இவர்களுடன் சரிதாவுடன் மூத்த மகள் செர்மிலியும் வசித்து வந்தாள்.

 தகராறு

தகராறு

கல்யாணத்துக்கு முன்பு சரிதா பல்லாவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சூபர்வைசராக வேலை பார்த்து வந்தார்.. மதனுடன் பழக்கம் ஏற்பட்டு, கல்யாணம், குழந்தை என்று ஆகிவிடவும், அந்த வேலைக்கு போகாமல் இருந்தார்.. இப்போது மறுபடியும் வேலைக்கு போவதாக சொல்லவும், மதன் அதற்கு முட்டுக்கட்டை போட்டார்.. வேலைக்கு எங்கும் போகக்கூடாது கண்டிஷன் போடவும், இவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இதனிடையே, கடந்த சில நாட்களாகவே மதனின் முதல் மனைவியின் மகள் சங்கீதா, அடிக்கடி செல்போனில் தன் அப்பாவுடன் பேசி கொண்டிருந்தார்.. இந்தவிஷயம் சரிதாவுக்கு தெரிந்து கொந்தளித்து போய்விட்டார்.. முதல் மனைவி, குழந்தைகளுடன் தொடர்பே இல்லை என்று சொல்லிவிட்டு, இப்போது ஏன் பேசுகிறீர்கள்? அவர்களுடன் உறவு இருக்கும்போது என்னை ஏன் கல்யாணம் செய்து ஏமாற்ற வேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இந்த சண்டைதான் கடந்த 2 நாட்களாக ஓடிக் கொண்டிருந்தது.

 கதறி அழுதாள்

கதறி அழுதாள்

இதில் மதனை சரிதா சரமாரியாக திட்டவும் ஆத்திரமடைந்த மதன், வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சரிதாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்... இதில், சம்பவ இடத்திலேயே சரிதா ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார்... இந்த அதிர்ச்சி சம்பவத்தை சரிதாவின் 7 வயது மகள் கண்ணால் பார்த்து அலறினாள்.. கதறி கதறி அழுதாள்.. ஆனால், மதனோ, தனக்கு பிறந்த 7 மாத குழந்தையை மட்டும் எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

 7 வயது குழந்தை

7 வயது குழந்தை

தகவல் அறிந்த ஆவடி போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, வழக்கு பதிவு செய்தனர்.. மதனையும் தேட ஆரம்பித்தனர்.. வெறும் 3 மணி நேரத்தில் மதன் பிடிபட்டுவிட்டார்.. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.. அவரிடம் இருந்த குழந்தையை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்... ஆனால் சரிதாவின் அந்த 7 வயது குழந்தைதான், அம்மா இல்லாமல் கண்ணீர் விட்டு அழுதபடியே இருக்கிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+