"பியூட்டி பார்லர்" மனைவி.. அடங்காத சந்தேகம்.. கிச்சனுக்கு ஓடிப்போய் கணவன் செய்த பகீர்..!
மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்
சென்னை: சண்டை போட்டு கொண்டே இருந்த கணவர், கிச்சனுக்கு ஓடிப்போய் கத்தி எடுத்து வந்து மனைவியின் மார்பு, கழுத்து பகுதியில் குத்தி கொன்றுவிட்டார். எல்லாத்துக்கும் காரணம் நாசமா போன அந்த சந்தேகம்தான்.
செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் லாரன்ஸ்.. 48 வயதாகிறது.. இவர் ஒரு கார்பென்ட்டர்.. அதே பகுதியில் வேலை பார்த்து வருகிறார்.. மனைவி பெயர் சரோவர்ஷா.. 41 வயதாகிறது.. 2 மகள்கள் உள்ளனர்.

இவ்வளவு காலம் செங்கல்பட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர்கள், 2 மாசத்துக்கு முன்புதான், மாதவரம் பால்பண்ணை அருகில் ஒரு வாடகை வீட்டிற்கு குடி வந்தனர்.. சரோவர்ஷா செங்குன்றத்தில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
ஆனால், சில நாட்களாகவே, அதாவது பியூட்டி பார்லர் வேலைக்கு போனதில் இருந்தே, இவரது நடத்தை மீது லாரன்சுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. சம்பவத்தன்றும் இப்படித்தான் சண்டை வந்துள்ளது..

இதில் ஆத்திரமடைந்த லாரன்ஸ் கிச்சனுக்கு போய், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து, சரோவர்ஷாவின் மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடி விட்டார்.. சரோவர்ஷா வலியால் அலறி துடிக்கவும், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சரோவர்ஷாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்...
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.. தகவலறிந்து வந்த மாதவரம் பால்பண்ணை போலீசார், சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு வைத்தனர். கல்பாக்கத்தில் மறைந்து கொண்டிருந்த லாரன்ஸையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications