ஏங்க இப்படி குடிச்சி கூத்தடிக்கிறீங்க.. மனைவியை கத்தியை எடுத்து குத்தி கொன்ற கணவன்.. பெருங்குடியில்!
மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்
Recommended Video
சென்னை: "ஏங்க இவங்களை எல்லாம் கூட்டி வந்து இப்படி தினமும் வீட்டு வாசலில் தண்ணி அடிக்கிறீங்களே" என்று கேட்ட மனைவியை கத்தியை எடுத்து வந்து தாறுமாறாக குத்தி கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டார் கணவர்! வலைவீசி தேடிய போலீசார் இப்போது கணவனை கைது செய்துள்ளனர்.
பெருங்குடி கல்லுக்குட்டை இந்திரா தெருவை சேர்ந்தவர் உதயகுமார். கார் டிரைவராக உள்ளார். மனைவி மணிமேகலை. 2 வயதில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். 30 வயதான உதயகுமார், மதுவுக்கு அடிமையானவர்.
தினமும் மது இல்லாமல் இருக்க மாட்டார். மேலும் நண்பர்களையும் வரவழைத்து, வீட்டு வாசலில் தண்ணி அடிப்பதையும் பழக்கமாக வைத்திருந்து இருக்கிறார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஆனாலும் நண்பர்கள் வீட்டில் வந்து தண்ணி வழக்கமாகிவிட்டது.

அழுதார்
நேற்று முன்தினம் இரவும் இப்படித்தான் உதயகுமார் 4 நண்பர்களுடன் வீட்டில் தண்ணி அடித்து கொண்டிருந்ததால், மணிமேகலைக்கு கோபம் அதிகமாக கணவனை திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதயகுமாரின், நண்பர் மணி என்பவர் மணிமேகலையை அசிங்கமாக திட்டவும், வாக்குவாதம் அதிகமானது. இதனால் மனம் உடைந்த மணிமேகலை, தன் குடும்பத்தினரிடம் இதை சொல்லி அழுதார்.

ஆத்திரம்
எனவே இது சம்பந்தமாக மணிமேகலை குடும்பத்தார், துரைப்பாக்கம் போலீசில் புகார் தந்தனர். போலீசாரும் இரு தரப்பையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஸ்டேஷன் வரை விஷயத்தை கொண்டு போனது உதயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டுக்கு வந்ததும் திரும்பவும் மணிமேகலையுடன் சண்டை போட்டார்.

காய்கறி வெட்டும் கத்தி
நேராக கிச்சனுக்கு போய் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, மணிமேகலையின் கழுத்து, மார்பு என பல இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார்.மணிமேகலை ரத்த வெள்ளத்தில் சரிந்ததை பார்த்ததும், உதயகுமார் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மணிமேகலையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றும், மணிமேகலை பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை
இந்த கொலை சம்பந்தமாக துரைப்பாக்கம் போலீசார் உதயகுமாரை தேடி வந்த நிலையில் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. விரைந்து சென்ற போலீசார் இன்று காலை உதயகுமாரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications