அழகான மனைவி.. விடிய விடிய பக்கத்திலேயே உட்கார்ந்து.. கணவன் செய்த பகீர் காரியம்.. வெலவெலத்த ஊத்தங்கரை
சென்னை: மனைவி அழகாக இருந்ததால், சந்தேகமும் அதிகமாகி குடும்பத்தை சிதைத்துவிட்டது.. இறுதியில் ஒரு கொலை வரை இந்த விவகாரம் முடிந்துவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ளது பள்ளசூளகரை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் தங்கராஜ்.. இவரது மனைவி ருக்குமணி.

கல்யாணமாகி 12 வருஷமாகிறது.. ஆனால், குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.. மனைவி அழகாக இருப்பதால், கல்யாணம் ஆனதில் இருந்தே தங்கராஜுக்கு சந்தேகம் பீடித்துள்ளது.. இதனாலேயே 2 பேருக்கும் அடிக்கடி சண்டையும் தகராறுமாக வெடித்துள்ளது.
தங்கராஜ் டெய்லர் வேலை பார்க்கிறார்.. குடிப்பழக்கமும் இருந்துள்ளது.. வீட்டு செலவுக்கு பணமும் தராமல் இருந்துள்ளார்.. இதையடுத்து, ஒரு தனியார் ஷூ கம்பெனியில் ருக்குமணி வேலைக்கு போக ஆரம்பித்தார்.. அப்போது அவர்களுக்குள் இருந்த சண்டை மேலும் அதிகமானது.
ராத்திரி நேரம் ஆகிவிட்டால் இவர்களது சண்டை அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்த ஒரு விவகாரம்தான்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் சண்டை வந்தது.. ஒருகட்டத்தில் ருக்மணி தூங்க போய்விட்டார்.. ஆனால் ஆத்திரம் அடங்காத சந்தேகபுத்தி கணவன், விடிகாலை ஐந்தரை மணி வரை அங்கேயே உட்கார்ந்து கொண்டார்.. பிறகு 30 கிலோ எடை கொண்ட கல்லை தூக்கி கொண்டு வந்து, தூங்கிக்கொண்டிருந்த ருக்மணி தலையில் போட்டார்.
இதில் தலை சிதறி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளிக்கவும் விரைந்து சென்று தங்கராஜை கைது செய்தனர்.. ருக்மணியின் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்ய தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு தவறும் செய்யாத ருக்மணி, கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சடலமாக விழுந்து கிடந்ததை கண்டு உறவினர்கள் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications