48 வயசு மனோன்மணி.. 70 வயசு நாராயணன் செஞ்ச காரியம்.. அதிர்ச்சியான செம்மஞ்சேரி!
சென்னையில் மனைவியை கொன்ற கணவன் தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: கதவை பூட்டிக் கொண்டு, 48 வயசு மனோன்மணியை 70 வயசு நாராயணன் செய்த காரியத்தை பார்த்து செம்மஞ்சேரி மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர்தான் இந்த நாராயணன்.. 70 வயசாகிறது.. இவரது மனைவிதான் மனோன்மணி.. கல்யாணம் ஆகி 25 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள்.

ஆனால் கல்யாணம் ஆனதில் இருந்தே மனோன்மணி மீது நாராயணனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.. அதனால், இவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.
அப்படித்தான் சம்பவத்தன்றும் தகராறு நடந்துள்ளது.. ஒருவருக்கொருர் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுக் கொண்டனர். ஒருகட்டத்தில் டென்ஷன் அடைந்துவிட்ட நாராயணன், வீட்டின் வெளியே இருந்து ஒரு பெரிய கல்லை எடுத்து கொண்டு உள்ளே வந்தார்.. கதவை உள்பக்கமாகவும் மூடிக்கொண்டு, மனோன்மணி தலையில் தூக்கி போட்டார்.
பிறகு அதே கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கியும் உள்ளார்.. இதில் ரத்த வெள்ளத்தில் மனோன்மணி துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்து பயந்து போன நாராயணன் ரூமில் இருந்த ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டார்.. ரொம்ப நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் யதேச்சையாக வந்து பார்த்தபோதுதான், தம்பதி இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து சடலங்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
70 வயசு நாராயணனுக்கு 45 வயதில் கல்யாணம் ஆகியிருக்கும் என தெரிகிறது.. அப்போது மனோன்மணிக்கு 23 வயதுதான் இருந்திருக்கும்.. அதனால்தான் இருவருக்கும் மனப்பொருத்தம் இல்லாததாலேயே இதுபோன்ற சண்டைகள் அடிக்கடி வந்திருக்கும், சந்தேகத்தில் போய் முடிந்திருக்கும் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்!
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications