எப்போதும் விஜய்க்கு நல்லதே நினைப்பேன்.. எனது பேட்டி அவருக்கு எதிரானது இல்லை.. நடிகர் அஜித் விளக்கம்
சென்னை: ‛‛என் சமீபத்திய பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க சிலர் முயற்சிக்கின்றனர். அவர்கள் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன்'' என்று நடிகர் அஜித் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார். நடிகர் விஜய் தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகிறார். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் வகையில் விஜயின் கட்சி செயல்பட்டு வருகிறது.

மறுபுறம் நடிகர் அஜித் குமார், கார் ரேஸ் பக்கம் சென்றுள்ளார். தற்போது அவர் கார் ரேஸ் டீமை உருவாக்கி உலகளவில் நடக்கும் பந்தயங்களில் பங்கேற்க தயாராகி வருகிறார். இப்படியான சூழலில் தான் கடந்த கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி நடிகர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர்.
கரூர் நெரிசல் பற்றி அஜித் கருத்து
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் விஜய், தவெக நிர்வாகிகள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித் குமார் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில், கரூர் கூட்ட நெரிசல் பற்றி கருத்து தெரிவித்தார். அப்போது அவர்,‛‛அந்த சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஊடகங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்.
கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் அதிக கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி எதுவும் நடப்பதில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. அதனால் ஒட்டுமொத்த திரைத்துறையும் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறது. எங்களுக்கு அதில் விருப்பமில்லை.
ரசிகர்களின் அன்பு எங்களுக்குத் தேவைதான். அதற்காகக் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் அந்த அன்பை வெளிப்படுத்த உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது" என்றார்.
விஜய்க்கு ஆதரவா? எதிர்ப்பா? விவாதம்
நடிகர் அஜித் குமாரின் இந்த கருத்து பெரும் கவனம் பெற்றது. நடிகர் விஜயின் ஆதரவாளர்கள் நடிகர் அஜித்குமார் தங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதாகவும், எதிர்தரப்பினரோ நடிகர் அஜித் குமார் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர். இது இன்று வரை சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகிறது.
அஜித் குமார் மீண்டும் விளக்கம்
இந்த விவாதத்துக்கு மத்தியில் நடிகர் அஜித் குமார் விளக்கம் அளித்துள்ளார்.அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இன்று இன்று மாலை 6.22 மணிக்கு வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவிற்கு அஜித் தொலைபேசி மூலமாக பேட்டியளித்துள்ளார். அதில் அஜித் கூறியுள்ளதாவது: ஆங்கில ஊடகத்துக்கு நான் அளித்த பேட்டி இளைஞர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக ஒரு சிலரால் அவர்களின் அஜெண்டாவை கொண்டு சேர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனக்கு தெரியும். இங்கு எதை எடுத்தாலும் பரபரப்பாக்க தான் முயல்வார்கள். ஆனால் நான் நேர்மறையான எண்ணத்துடன் எனக்கு பிடித்த பாதையில் பயணிக்க விரும்புகிறேன்.
விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் என..
ஒரு காலத்தில் சினிமா பத்திரிகையாளர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள், அரசியல் பத்திரிகையாளர்கள் என்று இருந்தனர். ஆனால் இன்று அரசியல் பத்திரிகையாளர்களை விட ஒரு சில சினிமா பத்திரிகையாளர்களே மிகவும் அரசியல் மயமாகி உள்ளனர்.
எனது நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. மாறாக நடிகர் அஜித்துக்கும், விஜய்க்கும் இடையேயான மோதல். நடிகர் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையேயான போர் என்பது போல் ஆகிவிட்டனர். நாம் நச்சுக்கலந்த சமூகமாக மாறிவிட்டோம்.
உள்நோக்கம் எதுவும் இல்லை
எழுதி வைத்து கொள்ளுங்கள். எனது ஆங்கில ஊடக பேட்டி 10, 20 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய பேசுப்பொருளாக ஆகியிருக்கும். உங்களையும், உங்களின் குடும்பங்களையும் முதலில் பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியானதாக இருந்தால் திரைப்படங்களை பாருங்கள் என்று என் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். படத்தை பாருங்கள் என்று மக்களிடம் இன்ப்ளூயென்ஸ் செய்யமாட்டேன். ஓட்டு கேட்டும் வரமாட்டேன்.
படங்களில் நடிப்பது, கார் ரேஸில் பங்கேற்பது என்று எனக்கு பிடித்ததில் கவனம் செலுத்துவேன். எப்போதெல்லாம் ரேஸ் காரில் உட்காருகிறோனோ, உயிர் போவதற்கு ஒரு நொடி போதும் என்பது எனக்கு நன்றாக தெரியும். இதனால் எனக்கு எந்தவொரு திட்டமோ, உள்நோக்கமோ இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை மிகவும் எளிதில் உடையக்கூடியது. என்னால், முடிந்தவரை நன்றாக வாழ விரும்புகிறேன்.
கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது
கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. அது நீண்ட நாட்களாக நடக்க காத்திருந்த விபத்து. இதற்கு முன்பு ஆந்திரா சினிமா தியேட்டரில் நடந்துள்ளது. பெங்களூர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது. பல நாடுகளில் நடந்துள்ளது.
பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்பது நான் உள்பட அனைவருக்கும் பொருந்தும். எனது இந்த கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படாது என்று நம்புகிறேன். ஒரு சில ஊடகங்கள் ரசிகர்கள் மீது பலியை சுமர்த்துகின்றன.
என்னிடமும் தவறு உள்ளது
ஆனால் ஒரு சம்பவத்தை கோடிட்டு காட்ட விரும்புகிறேன். எனது தந்தை இறந்த சமயத்தில் அவரது பூத உடலை எடுத்து சென்றபோது ஒரு சில ஊடகங்கள் எங்களின் பின்னால் கேமராக்களுடன் பின்தொடர்ந்தன. உயிர் இல்லாத அந்த உடலின் காட்சிகளை பதிவு செய்ய முயற்சித்தனர். இதனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்களின் உயிரை பணயம் வைக்க நேர்ந்தது.
ஒரு சில ஊடகங்களே இப்படி இருக்க ரசிகர்களையோ, தொண்டர்களையோ குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது. ஏற்கனவே நான் சொன்னது போல நானும் குற்றத்துக்கு பொறுப்பானவன் தான்.என்னிடமும் தவறுகள் உள்ளன.
போலி சமூக ஆர்வலர்கள்
ஓட்டளிப்பதை நான் ஒரு குடிமகனின் கடமையாக பார்க்கிறேன். தமிழகத்திலோ, இந்தியாவிலோ அல்ல உலகம் முழுவதுமே மக்களும், அரசுகளும் ஒன்றுக்கொன்று பிணைந்ததாகவே இருக்க வேண்டும். மக்களாகிய நாம் உரிமைகளை பெற கடமைகளை செய்தாக வேண்டும்.
ஆம், சில சமூகங்கள் சுரண்டப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றன. அதுபோன்ற மக்களுக்கு குரல் கொடுக்க அரசியல் கட்சிகளும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களும் உள்ளனர். ஆனால் உள்நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதாக சில போலி சமூக ஆர்வலர்கள் உள்ளனர். அதுபோன்ற போலிகளால் மூளைச்சலவை ஆகாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்
அதேபோல் எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க சிலர் முயற்சிக்கின்றனர். அவர்கள் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன். எல்லாருமே அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார். இதனால் தவெக நிர்வாகிகள், நடிகர் விஜயின் ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
-
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன தவெக.. சில நிமிடங்களில் வெளியான கரூர் ட்ரோன் காட்சி.. வசமாக மாட்டிய விஜய் -
மீண்டும் சொதப்பிய விஜய்! கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தா.. பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்! -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
பாஜகவுடன் உறவு.. புஸ்ஸி ஆனந்தை கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா.. சங்கடத்தில் சென்னை தவெக நிர்வாகிகள்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications