‛நான் நல்லவன் இல்லை’.. விஜயின் அரசியல் என்ட்ரி பற்றி ராதாரவி கூறிய பரபர பதில்.. கவனம் பெற்ற வார்த்தை
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்துள்ளார். இந்நிலையில் தான் நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு நடிகர் ராதாரவி சொன்ன பதில் அதிக கவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அவர் அறிவித்தார். இதையடுத்து நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருந்தாலும் கூட நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் களமிறங்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் என்பது கட்சி தொடங்கிய போதே தமிழக வெற்றிக் கழகம் என்பது 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடும் என அறிவித்தது தான்.
இந்நிலையில் தான் தற்போது நடிகர் விஜய் படிப்படியாக நடிகரில் இருந்து அரசியல்வாதியாக மாறி வருகிறார். உதாரணமாக கூற வேண்டும் என்றால் அவர் சினிமாவில் இருந்து முற்றிலுமாக வெளியேற உள்ளார். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாட்களில் போன் செய்யும், எக்ஸ் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களை நேரில் சந்தித்து தமிழக அரசை விமர்சித்தார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தினார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சட்டசபை தொகுதி வாரியாக பரிசு, பாராட்டு சான்று வழங்கினார். இந்த விழாவில் நீட் தேர்வு தேவையில்லாதது என்று அவர் கூறினார். இப்படி மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுகவுக்கு எதிராக அவரது வாய்ஸ் என்பது வந்துள்ளது.
இத்தகைய சூழலில் தான் அவர் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை தனித்து எதிர்கொள்ள உள்ளாரா? இல்லாவிட்டால் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளாரா? என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. இதுபற்றி அவர் தரப்பில் இன்னும் எதுவும் சொல்லப்படாத நிலையில் விஜயுடன் கூட்டணி வைக்க அதிமுக, நாம் தமிழர் உள்பட பல கட்சிகள் காய்நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தான் நடிகர் ராதாரவி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறுகின்றனர். நடிகராக இருந்து தயாரிப்பாளர்களாக மாறுகின்றனர். அதேபோல் விஜய் நடிகராக இருந்து அரசியலுக்கு வருகிறார். விஜயின் அரசியல் வருகை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்டார்.
அதற்கு ராதாரவி, ‛‛நான் அரசியலில் இருந்து வெளியே வரும்போது அவர் உள்ளே வருகிறார். அதனை நான் நினைத்துள்ளேன். விஜய்க்கு வயது இருக்கிறது. எனக்கு அரசியலில் 40 ஆண்டுகால சர்வீஸ் உள்ளது. அரசியலில் நல்லது, கெட்டது எதுவென்று தெரிந்து போய்விட்டது. நானும் ஒழுங்கா இருக்கமாட்டேன். நானும் நல்லவன் கிடையாது. அதனால் அரசியல் இருந்து ஒதுங்கி இருப்பது தான் சிறந்தது என்று ஒதுங்கிவிட்டேன்.
ஆனால் விஜய் வருவது பெருமையாக இருக்கு. அவருக்கு ஆர்வம் வருகிறது. அரசியல் என்பதன் உண்மையான அர்த்தம் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. பொதுநலம் என்ன என்பது பற்றி கற்று கொள்ளலாம். பொதுநலம் என்ன என்பதை நான் கற்று கொண்டேன். ஆனால் வந்தது நல்லது தான். பொது அறிவு டெவலப் ஆகும்'' என்றார்.
நடிகர் ராதாரவி முதலில் அதிமுகவில் செயல்பட்டார். அவர் 2001ல் சென்னை சைதாப்பேட்டை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதன்பிறகு திமுகவில் சேர்ந்தார். பிறகு பாஜகவில் சேர்ந்து செயல்பட்டார். தற்போது அரசியலை விட்டு அவர் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் தான் நடிகர் விஜயின் அரசியல் வருகையை அவர் வரவேற்றுள்ளார்.
-
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications