என்னைப் பாப்பாத்தி என்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை! அமைதி புயலாக மாறிய காயத்ரி ரகுராம்
சென்னை: அதிமுகவில் இணைந்துள்ள காயத்ரி ரகுராம் தனது தந்தை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்தான் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் முகமாக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். அண்ணாமலை மாநிலத் தலைவராகப் பதவியேற்ற பிறகு அவர் கட்சி ரீதியாக ஓரங்கட்டப்பட்டார். அதைப் பல முறை காயத்ரியே பகீரங்கமாக தெரிவித்து இருக்கிறார். அதன்பின்னர் பாஜகவை விட்டு வெளியேறிய இவர், எக்ஸ் தளத்தில் அண்ணாமலை செய்யும் உள்ளடி அரசியலை அம்பலப்படுத்தி வந்தார். குறிப்பாக பாஜக வார் ரூம் என்ன செய்கிறது? அதற்குள் அண்ணாமலைக்கு எதிராகப் பேசுபவர்களை எப்படி டார்கெட் செய்து ட்ரோல் செய்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

சில காலம் அரசியல் பாதையைவிட்டு அமைதியாக இருந்து வந்த இவர், திமுகவில் இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர் அதிரடியாக அஇஅதிமுகவில் இணைந்தார். இப்போது அதிமுகவின் மாநில மகளிர் அணித் துணைச் செயலாளராக இருக்கிறார் காயத்ரி ரகுராம்.
இவர் அளித்துள்ள பேட்டியில் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள், அரசியல் ரீதியாக அவர் மீது வைக்கப்பட்ட வசைகள் எனப் பலவற்றுக்கும் சளைக்காமல் பதிலளித்திருக்கிறார். காயத்ரி பேசுகையில், "எனக்கு அதைப் பற்றி ஒன்றும் வருத்தம் இல்லை. பத்து வருடங்கள் முன்பாக செய்த வேண்டுதல். அதற்காக மொட்டை அடித்தேன். அப்போது அதைச் செய்ய முடியவில்லை. இப்போதுதான் செய்தேன். அதை வைத்து என்னை சிலர் பாப்பாத்தி என்று அழைத்தார்கள்.
ஆமாம் நான் பிராமண பெண்தான். அதனால் நான் பிராமணிய கொள்கைகளைக் கடைப்பிடிக்கமாட்டேன். என்னைப் பொறுத்தவரை மனம் சுத்தமாக இருக்கவேண்டும். இந்தச் சாதி வேறு பாகுபாடு எல்லாம் ஒன்றும் இல்லை. சாதியைப் பார்த்து என்னை அப்பா, அம்மா வளர்க்கவும் இல்லை. என் அப்பாவே வேறு சாதிப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார். எனவே எனக்குச் சாதி கிடையாது. அதை மீறி பாப்பாத்தி என்றும் பிராமண பெண் என்று சிலர் அழைத்தால் அது பற்றி எனக்குக் கவலை இல்லை.
மக்கள் சாதி பார்த்து எல்லாம் ஓட்டுப் போடுவதில்லை. இவர் வந்தால் நல்லது செய்வாரா இல்லையா? என்று பார்த்துத்தான் ஓட்டுப் போடுகிறார்கள். எங்கள் பூர்வீகம் கும்பகோணம் பக்கம் உள்ள பாபநாசம்தான். அங்கே எங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் முஸ்லிம்கள்தான். எங்கள் குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருந்தது இந்தக் குடும்பம். பர்மாவிலிருந்து வந்தவர்கள். எங்கள் கொள்ளு தாத்தா கே சுப்பிரமணியம் பெரிய இயக்குநர். அவர் இயக்கிய தியாக பூமி படம் உட்படப் பல படங்களில் அவர் சாதிக்கு எதிராகப் பேசி இருப்பார். எனவே எங்கள் குடும்பத்தில் சாதி என் கொள்ளு தாத்தா காலத்திலேயே உடைக்கப்பட்டுவிட்டது.
என்னை டார்கெட் செய்து சமூக வலைத்தளத்தில் விமர்சிப்பவர்கள் பாஜகவினர்தான். பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தான் இப்படியான ஒரு கலாச்சாரம் தொடங்கியது. ஏஜென்சி வைத்து சிலரை விமர்சிப்பதை அந்தக் கட்சிதான் தொடங்கிவைத்தது. கட்சித் தொண்டர்கள் யாரும் இதைச் செய்வது இல்லை. அடையாளமே தெரியாத இமெயில் கணக்கு மூலம் பணத்தை வாங்கிக் கொண்டு இப்படி ட்ரோல் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்கள்தான் இதைச் செய்கிறார்கள். இதை எல்லாம் மனதில் ஏற்றிக் கொண்டால் நாம் பொதுவெளியில் வேலை செய்ய முடியாது. உலகமே ஆணாதிக்க சமூகம்தான். அதிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை" என்று பேசி இருக்கிறார்.
விவாகரத்து செய்து கொண்டதற்குப் பின் தனித்து வாழ்ந்து வருவது குறித்துத் தொடர்ந்து பேசிய காயத்ரி, "எனக்கு அப்பா இல்லை. விவாகரத்திற்குப் பின் ஆண் துணை இல்லை என்பது ஒரு குறைதான். சிலர் விவாகரத்தான பெண் என்பதால் எளிதாக நம்மைச் சீண்டலாம் என நினைக்கிறார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நம்மை தாக்குகிறார்கள். என்னைப் போன்ற பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதனால் விவாகரத்து பெற்ற பெண்கள் மன ரீதியாகச் சோர்ந்து போய் விடுகிறார்கள். அப்படி ஆகக் கூடாது. தைரியமாக நாம் நிற்கவேண்டும். மனதில் உறுதி வேண்டும். பார்ப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நாம் யார் என்பது நமக்குத் தெரியும். நம் மனசாட்சிக்கு தெரியும்.
சில நேரங்களில் ஒரு மனதிற்குள் தடுமாற்றம் இருக்கும். வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும் என்று தோன்றும். சில நேரம் துணை வேண்டாம் என்றும் தோன்றும். என் வாழ்க்கையில் இனிமேல் ஒரு கல்யாணம் இல்லை. யாரேனும் அப்படி விருப்பம் தெரிவித்தால் சகோதரராக ஏற்றுக் கொள்வேன். ஆனால், யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்" என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.
-
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை! எங்கிருந்தாலும் வாழ்க..! சொன்னது நயினார் நாகேந்திரன் இல்லை! யார்னு பாருங்க! -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications