அண்ணாமலை சொன்ன வார்த்தை.. ரொம்ப தவறு.. விஜயகாந்த் பற்றி எப்படி நீங்க பேசலாம்.. சீறி வந்த "புள்ளி"

கலைஞர்.. அம்மா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன்.. நான் யாருக்கும் கவலைப்பட மாட்டேன் என்றுள்ளார் அண்ணாமலை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துக்கள் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அந்த கட்சியை தொடங்கிய போது தமிழ்நாடு அளவில் பெரிதும் கவனிக்கப்பட்டார். கருப்பு எம்ஜிஆர் என்று புகழப்பட்டவர் எதிர்கட்சித் தலைவராகவும் கூட ஆனார். ஆனால் போக போக.. முக்கியமாக 2011 சட்டசபை தேர்தலுக்கு பின் அவருக்கு உடல்நலம் குன்றியது.

அதோடு தேமுதிகவின் வாக்கு வங்கியும் வேகமாக சரிந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காமல் 5 சதவிகிதம் வாக்குகளை எடுக்கவே தேமுதிக கடுமையாக திணறியது. இந்த நிலையில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்தார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, கருணாநிதி, ஜெயலலிதா போல நான் முடிவு எடுப்பேன். அவர்களை போல நானும் தலைவன்தான். அவர்கள் எடுத்த முடிவை எதிர்த்து பலர் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். அவர்களை போல நானும் தலைவன்தான். தேசிய கட்சி என்றாலே பெரிய கட்சி இல்லை, தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை இருந்தது. நாம் திராவிட கட்சிகளை சார்ந்து இருந்த நிலை இருந்தது. அது தற்போது மாறிவிட்டது. அண்ணாமலை இங்கே தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. நான் எல்லோரையும் தாஜா பண்ணிக்கொண்டு இருக்க மாட்டேன். நான் தலைவன்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

கலைஞர்.. அம்மா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன்.. நான் யாருக்கும் கவலைப்பட மாட்டேன். நான் தலைவரை போல சில முடிவுகளை எடுப்பேன். அண்ணன் விஜயகாந்தை செய்தது போல என்னை செய்ய முடியாது. அவரின் கேரக்டரை காலி செய்து பேசியது போல என்னுடைய கேரக்டரை பற்றி பேச முடியாது. என்னை எல்லாமே அப்படி ஒதுக்கிவிட முடியாது. நீங்கள் புதிய கட்சிக்கு சென்று இருக்கிறீர்கள். பார்த்துக்கொள்ளுங்கள். நன்றாக செயல்படுங்கள். வாழ்க வாழ்க கோஷம் எல்லாம் கம்மியாக போடுங்கள். ஓவராக போட்டால் நீங்கள் இங்கே இருந்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இப்போது 3வது கியரில் இருக்கிறோம். விரைவில் 5வது கியருக்கு மாறுவோம். கஷ்டம் இருப்பவர்கள் கிளம்பி செல்லுங்கள். டெல்லி போக வேண்டுமா.. 8 ஆயிரம்தான் டிக்கெட்.. கிளம்பி செல்லுங்கள்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்த் பேட்டிகளில் கோபம் அடைந்ததை வைத்து அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்கள் காரணமாக அவரின் அரசியல் வாழ்க்கையும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில்தான் விஜயகாந்திற்கு செய்தது போல தனக்கு செய்ய முடியாது என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார். ஆனால் அண்ணாமலையின் இந்த கமெண்ட் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. முக்கியமாக தேமுதிகவினர் இடையே இந்த கமெண்ட் விவாதத்தங்களை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

இது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் கடுமையாக கமெண்ட் செய்துள்ளார். அதில், கேப்டன் விஜயகாந்த் சார் பற்றி அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அது மிகவும் தவறு. Insensitive comment இந்த பேச்சை மக்கள் விரும்ப மாட்டார்கள்.. அதை நான் கண்டிக்கிறேன். விஜயகாந்த் சார் நல்ல மனிதர், பலருக்கு உதவி செய்தவர் மற்றும் துணிச்சலான தலைவர், என்று விமர்சனம் வைத்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+