'ஐயம் சாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா'.. இசைவாணிக்கு எதிராக எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஐயம் சாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா' என்று பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து சர்ச்சையைக் கிளம்பும் வகையில் பாடலை பாடிய இசைவாணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், எல்லா மொழி பக்தர்களும் கேட்டு 'பரிசளிப்பார்கள் என்று கண்டித்துள்ளார்.

பிரபல கானா பாடகி இசைவாணி பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடி வருகிறார். மேலும், இவர் பிக்பாஸ் சீசன் 5-இல் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார். இதேபோல் சில தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றிருக்கிறார். ப ரஞ்சித் கடந்த 2019 ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில் ''I am sorry ayyappa'' என்ற பாடலை இசைவாணி பாடினார். மேலும் இந்த பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வந்தார்.

ayyappan ms bhaskar

அப்படித்தான் கானா பாடகி இசைவாணி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஐஎம் சாரி ஐயப்பா பாடலை பாடினார். அவர் பாடிய பாடல் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. இதனால் இப்போது அது சர்ச்சையாகி எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பிய தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா , கானா பாடகி இசைவாணியை தமிழ்நாடு காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இது குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதேபோல் பாஜக நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்பினர் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே இசைவாணியை கைது செய்யக்கோரி காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவிக.நகர், செம்பியம் ஆகிய காவல் நிலையங்களில் கானா பாடகி இசைவாணி, நீலம் பவுண்டேஷன் இயக்குனர் டைரக்டர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்யக்கோரி புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சபரிமலை ஐயப்பன் பாடல் விவகாரத்தில் தன் கருத்தை மேலாளர் வாயிலாக பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறுகையில், "நான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். சமீபத்தில் இசைவாணி அவர்கள் பாடியிருந்த 'ஐயம் சாரி ஐயப்பா' பாடல் கேட்டேன்! சுவாமி ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்டு பாடத் தொடங்கிய விதம் அருமை, நல்ல குரல் வளம். ஆடிக்கொண்டே பாடிய ஸ்டைல் அற்புதம்! ஒரே ஒரு குறை! பாடல் தெளிவாக கேட்காத அளவுக்கு வாத்தியங்களின் ஓசை அதிகம்.

இதைப்போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு விஷு, மகரஜோதி போன்ற விசேஷ நேரங்களில் பாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும்! இவர்களுக்கும் 'பூசை' சிறப்பாக நடக்கும்! நான் சிறுவனாக இருந்த போது எனது மூத்த சகோதரர் சபரிமலைக்கு இருமுடி கட்டி, வாய்க்கரிசி வாங்கி செல்வதை கண்டிருக்கிறேன்.

அதே போல் இவர்களும் உறவினர்கள் நண்பர்களிடம் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு சென்று இசை நிகழ்ச்சி நடத்தலாம்! பாடல் எழுதியவரையும் அறிமுகப்படுத்தலாம். இப்படிப்பட்ட அருமையான பாடலை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பாடலாம்.

எல்லா மொழி பக்தர்களும் கேட்டு 'பரிசளிப்பார்கள்' அல்லவா? யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பாடலாம். என்ன ஒன்று. ஐயன் ஐயப்பன் இதை 'நிந்தா ஸ்துதி'யாக ஏற்றுக்கொள்வார்! அவர் வாகனமாகிய புலி ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை! 'ஐயம் சாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா," என்று கூறியுள்ளார்.

இதேபோல் நடிகை கஸ்தூரியும் இது பற்றி குரல் எழுப்பி வருகிறார். அவர் கூறும் போது, " இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து செய்தியாளர்களும், பொதுமக்களுமே கேட்கின்றனர். இதிலிருந்து நீங்கள் தமிழக அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடியும். அரசால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை போலிருக்கிறது. இசைவாணி மீது ஏன் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னிடம் பலர் கேட்கிறீர்கள். ஆனால் போலீசார் என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். எனவே இது குறித்து என்னால் பேச முடியாது. சிறையில் புத்தகங்களை படித்தேன். நான் யார் நம்பிக்கையையும் கொச்சைப் படுத்தவில்லை. ஒருவர் நம்பிக்கையை கொச்சைப்படுத்த கூடாது" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+