நான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி
பெரியார் குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது, அந்த கருத்து உண்மைதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பெரியார் குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது, அந்த கருத்து உண்மைதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய பரபரப்பாகி உள்ளது. துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் மற்றும் முரசொலி குறித்து பேசினார்.
அதில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை. முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம்.

பெரியார் எப்படி
பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார்.இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார்.

ரஜினி எப்படி
நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிராக இணையத்தில் பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். இணையத்தில் இதனால் ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்துள்ளது.

விளக்கம் அளித்தார்
இந்த நிலையில் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டி அளித்து விளக்கம் கொடுத்தார். அதில், துக்ளக் விழாவில் நான் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாகி வருகிறது. பெரியார் பற்றி நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சாரி. பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது.

நான் சொன்னது உண்மை
நான் இல்லாததை சொல்லவில்லை.இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் கேள்விப்பட்டதை, படித்ததைதான் நான் சொல்கிறேன்.2017ல் அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததைதான் நான் பேசினேன்.

பெரியார் பேரணி
1971ல் நடந்த பெரியார் பேரணி குறித்து நான் கற்பனையாக பேசவில்லை. ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிந்தது உண்மைதான். நான் சொன்னது தவறு கிடையாது, தெளிவாக அதை நான் விளக்கிவிட்டேன்.

நான் பார்த்தது
நான் பார்த்ததை நான் சொல்கிறேன், அவர்களை பார்த்ததை அவர்கள் சொல்கிறார்கள். இதை இனியும் பெரிதுபடுத்த கூடாது. இதை மறுக்க வேண்டிய சம்பவம் கிடையாது, மறக்க வேண்டிய சம்பவம், என்று ரஜினிகாந்த் தனது பெட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications