மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை.. நான் பேசியதை திரித்து விட்டார்கள்.. ஆளுநர் ரவி பரபரப்பு விளக்கம்
சென்னை: மகாத்மா காந்தியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவமதித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது பேச்சுக்கு ஆளுநர் விளக்கம் அளித்துள்ளர். மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை எனவும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கிறேன் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாட்ட விழா கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்திய தேசிய ராணுவத்தின் கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம்.

கலாச்சார சின்னமாகவும், ஆன்மீக சின்னமாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளங்குகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் இந்திய ராணுவ படையில் தான் தமிழர்கள் அதிகளவு நிறைந்திருந்தனர். வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகம் போற்றப்பட வேண்டியவை. நமக்கு தெரியாமல் நிறைய தியாகிகள் உள்ளனர்.
அவர்களை பற்றி அறிய நாம் முயற்சிப்பது கிடையாது. மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திர போராட்டம் நடந்த காலத்தில், பிரிவினைவாத முயற்சியும் நடந்தது. இந்தியர்கள் அப்போது பிரிந்திருந்தனர். இந்திய தேசிய காங்கிரசால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை முழுமையாக ஏற்க இயலாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அது ஒரு சிறிய காரணமாக மட்டுமே இருந்தது.
1947- ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும், அவரது இந்திய தேசிய ராணுவமும், அதன் புரட்சியும்தான் முக்கிய காரணமாகும்" என்று பேசியிருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர் என் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் தான் தனது பேச்சுக்கு ஆளுநர் ஆர் என் ரவி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:- மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. காந்தியை நான் மதிக்கிறேன். அவருடைய போதனைகள் எனது வாழ்வில் பயனுள்ளதாக இருந்தன. காந்தியை அவமதித்துவிட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.
நேதாஜி பிறந்த நாள் விழாவில் நான் பேசியதை ஊடகங்கள் சில திரித்து வெளியிட்டன. நாட்டின் சுதந்திரத்திற்கு நேதாஜி அளித்த பங்களிப்புக்கு உரிய வகையில் அவர் பாராட்டப்படவில்லை என்றே நான் கூறினேன்" என்று கூறியுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications