அண்ணாமலை தர்மத்தை பின்பற்றுவதில்லை.. அவருடன் இருப்பவர்களும் தான்.. காயத்ரி ரகுராம் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவில் அண்ணாமலையுடன் இருப்பவர்கள் யாரும் தர்மத்தை பின்பற்றுவதில்லை, அண்ணாமலையும் பின்பற்றுவதில்லை என்று காயத்ரி ரகுராம் காட்டமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜகவில் உள்ள உட்கட்சி மோதல் வெளிப்படையாக தெரியும் அளவுக்கு சில நிர்வாகிகள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுப்பது என ட்விட்டரிலேயே நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் நடைபெற்று வருகிறது.

ஒரு பக்கம் திருச்சி சூர்யா- டெய்சி ஆடியோ வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னொரு பக்கம் திருச்சி சூர்யா தன்னிடம் தவறாக பேசிய வீடியோக்கள் இருப்பதாக அலிஷா அப்துல்லா கடுமையான புகார்களை வைத்து இருந்தார்.

விழாவிற்கு அழைக்கவில்லை

விழாவிற்கு அழைக்கவில்லை

இந்த பிரச்சினைகள் எல்லாம் காயத்ரி ரகுராம் உள்கட்சி மோதல் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கிய பிறகு வெடித்தது என்று சொல்லலாம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் பாஜக நிர்வாகியான காயத்ரி ரகுராமிற்கும் தொடக்கத்தில் இருந்தே மோதல் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. பாஜகவின் அயலக தமிழர் மற்றும் பிறமாநில தமிழர் நலப்பிரிவின் தலைவர் பதவியில் இருந்த காயத்ரி ரகுராம், காசியில் நடைபெற்ற தமிழ் சங்கம் விழாவிற்கு அழைக்கவில்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

காட்டமான பதில்

காட்டமான பதில்

இதற்கு அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகள் காயத்ரி ரகுராமிற்கு காட்டமான பதிலை அளித்து இருந்தனர். இதையடுத்து காசியில் நடந்த காசி தமிழ் சங்கம் விழாவிற்கு இவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அண்ணாமலை இவரை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இங்குதான் மோதல் தொடங்கியது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பாஜக தலைகள் சென்ற நிலையில், இவருக்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிகழ்ச்சி காயத்ரி இருக்கும் துறைக்கு தொடர்பான நிகழ்ச்சி என்றாலும் அவரை அழைக்கவில்லை.

திருச்சி சூர்யா

திருச்சி சூர்யா

இதை பற்றி காயத்ரி இணையத்தில் வருத்தம் தெரிவித்த நிலையில்தான், அதற்கு அண்ணாமலை ஆதரவு நிர்வாகிகள் காட்டமாக பதில் அளித்தனர். இது தொடர்பான மோதல் நீடித்துக் கொண்டே சென்ற நிலையில்தான், திருச்சி சூர்யா பாஜக நிர்வாகி டெய்சி சரணிடம் பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து திருச்சி சிவா பேசுவதாக வெளியான ஆடியோ குறித்தும் காயத்ரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதுவும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் - காயத்ரிக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தியது.

அண்ணாமலை தர்மத்தை பின்பற்றுவதில்லை

அண்ணாமலை தர்மத்தை பின்பற்றுவதில்லை

இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கட்சிக்கு எதிராக அவர் செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்து 6 மாதத்திற்கு காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரத்திற்கு பிறகு அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி அவ்வப்போது தனது ட்விட்டரில் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், அண்ணாமலையோ அவருடன் இருப்பவர்களோ தர்மத்தை பின்பற்றுவதில்லை என்று காயத்ரி ரகுராம் காட்டமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் காயத்ரி ரகுராம் பதிவிட்டு இருப்பதாவது: -

யாரும் பின்பற்றுவதில்லை

யாரும் பின்பற்றுவதில்லை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் செயல்படும் பாஜக ஐடி பிரிவினரிடம் இருந்து மிகவும் மோசமான தனிப்பட்ட தாக்குதல்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர். பாஜகவில் அண்ணாமலையுடன் இருக்கும் யாரும் தர்மத்தை பின்பற்றுவதில்லை. அண்ணாமலையும் தர்மத்தை பின்பற்றுவதில்லை என்று விமர்சித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+