தமிழகத்தில் பாஜக இருக்கா என கேட்ட சுப்பிரமணியன் சுவாமி.. ‘இவுங்க எல்லாம்’ கடு கடுத்த அண்ணாமலை
சென்னை: சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, அண்ணாமலை என்றால் யாரு? தமிழகத்தில் பாஜக இருக்கா? என விமர்சித்தார். இது பற்றி அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அண்ணாமலை அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.
தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- யாரையும் பலவீனப்படுத்தி பாரதிய ஜனதா வளர விரும்பாது என மாநில தலைவராக நான் பொறுப்பேற்ற அன்றே சொன்னேன். அப்படி வளரும் வளர்ச்சி, வளர்ச்சி நிரந்தரம் கிடையாது. பாரதிய ஜனதா மீது நம்பிக்கை... மோடி மீது நம்பிக்கை.. ஆகியவை காரணமாகவே பாஜக கூட்டத்திற்கு மக்கள் திரண்டு வருகிறார்கள்.

இதைப்பார்த்து எந்த கட்சியும் அச்சப்பட தேவையில்லை. கடினமாக உழைப்போம். மக்களிடம் போய் நிற்போம். பாஜகவிற்காக நான் உரக்க பேசுகிறேன். சில பேருக்கு அது அச்சுறுத்தலாக இருந்தால் நான் எதுவும் செய்ய முடியாது. அப்போது செய்தியாளர்கள், தமிழகத்தில் பாஜக என ஒன்று இருக்கா? என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்தது குறித்து கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, பெரியவர்களை தரக்குறைவாக பேசுவது எனக்கு பிடிக்காத ஒன்று.
இவுங்க எல்லாம் ஓல்டு இந்தியா... நான் தான்.. என்னையை வந்து பார்த்தால்தான் ஏற்றுக்கொள்வேன் .. சுப்ரமணியன் சுவாமியை நான் இதுவரை பார்க்கவில்லை. பார்க்கவும் போவது இல்லை. எனக்கு எந்த காட்ஃபாதர் ஆசிர்வாதமும் தேவையில்லை. ஒருத்தரை போய் பார்த்து.. அவுங்க காலில் விழுந்து வணங்கினால்தான் என்னையை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் அந்த மாதிரி ஏற்புதலே எனக்கு தேவையில்லை..
நாங்கள் மோடியையும் தமிழக மக்களையும் நம்பி அரசியல் செய்கிறோம். வெளியில் இருந்து எந்த விதமான சர்டிபிகேட்டும் பாஜகவுக்கு தேவையில்லை. அதேநேரத்தில் அவுங்க பயன்படுத்திய வார்த்தைகளை நான் பயன்படுத்த போவது இல்லை. ஒரு கட்சியின் உழைப்பை கொச்சைப்படுத்துவதை எப்போதும் அண்ணாமலையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.பாஜகவும் ஏற்றுக்கொள்ளாது. அதனால் பழம்பெருமை பேசினால் கட்சி வளராது" என்றார்.
கோவயில் பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்டது குறித்து கேட்கிறீர்கள்.. கோவையில் இருக்கும் தொழில் அதிபர்களுக்கு இனியாவது சுதந்திரம் கிடைக்கட்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். அண்ணாமலை ஒரு கல்லூரிக்கு பேச போனால் மின்சாரத்தை கட் பண்ணுவாங்க... இந்தியாவின் நெ.1 ஸ்பின்னிங் மில்லில் ஒருவாரம் கரண்ட் கட் செய்தார். அண்ணாமலையை கூப்பிட்டதால் கரண்ட் கட் செய்தார்கள்.
இதுதான் ஜனநாயகமா? அமைச்சர் முத்துசாமி மீது எனக்கு மரியாதை உள்ளது. அவர் நிச்சயமாக கோவை மாநகரத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கு.. அனைவரையும் சமமாக நடத்துவார்கள் என நம்புகிறேன்..பொறுத்து இருந்து பார்ப்போம்" என்றார். கர்நாடக விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, எனக்கு டிகே சிவக்குமாரை பற்றி நன்கு தெரியும். டிகே சிவக்குமார் தேர்தல் அறிக்கையே மேகதாது அணை என்று போட்டு விட்டார்.
அந்த தேர்தல் அறிக்கை வெளியிடும் போது ப.சிதம்பரம் அங்கே இருந்தார். அவரே எடுத்து ரிலீசும் செய்கிறார். இவர்கள் எல்லாம் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள். கர்நாடகாவை பொறுத்தவரை இங்கே திமுக தெளிவாக சொல்ல வேண்டும்...தமிழர்கள் நலனின் கைவைத்தால் எந்த எல்லைக்கும் போவோம் என்று.. ஆனால் இவர்களுக்கு மோடியை எதிர்க்க கூட்டணி சேர்வதற்கே இவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. இவர்கள் எங்கே எதிர்க்க போகிறார்கள். இவர்கள் பேச்சுவார்த்தையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்?












Click it and Unblock the Notifications