Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 நிமிட ஆடியோ.. அதை மட்டும் ரிலீஸ் பண்ணா எடப்பாடி மொத்தமா ‘காலி’ - பகீர் கிளப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் பேசிய ஆடியோ போன்று இன்னொரு ஆடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதை வெளியிட்டால் எடப்பாடி பழனிசாமியே காலி என்றும் கூறி மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் நாஞ்சில் கோலப்பன்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளருமான நாஞ்சில் கோலப்பனும் பேசிய ஆடியோ உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அந்த ஆடியோவில் பேசியது நான் இல்லை பொன்னையன் மறுத்த நிலையில், அவர் தான் பேசினார் என்று குமரி மாவட்ட அதிமுக நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் திட்டவட்டமாக கூறினார்.

இந்நிலையில், மேலும் ஒரு 3 நிமிட ஆடியோ இருப்பதாகவும், அதை வெளியிட்டால் அதிமுகவே இருக்காது என்றும் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நாஞ்சில் கோலப்பன்.

லீக் ஆன ஆடியோ

லீக் ஆன ஆடியோ

கன்னியாகுமரி மாவட்டத்தைச் அதிமுக பிரமுகரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான நாஞ்சில் கோலப்பன் என்பவரிடம், அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் போனில் பேசியதாக சில வாரங்களுக்கு முன்பு ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடங்கி முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்பான பல்வேறு ரகசியங்களையும், கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் அந்த ஆடியோவில் புட்டுப் புட்டு வைத்தார். ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதில் பேசியது தான் இல்லை என்றும், மிமிக்ரி செய்யப்பட்டது என்றும் பொன்னையன் மறுப்பு தெரிவித்தார்.

அணிக்குள் குழப்பம்

அணிக்குள் குழப்பம்

அதேசமயம், போனில் மறுபுறம் பேசிய அதிமுகவைச் சேர்ந்த குமரி மாவட்ட நிர்வாகி நாஞ்சில் கோலப்பன், போனில் பேசியது தானும், முன்னாள் அமைச்சர் பொன்னையனும் தான் எனத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்தார் நாஞ்சில் கோலப்பன். இந்த ஆடியோவால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இடையே குழப்பங்கள் ஏற்பட்டன. எடப்பாடி பழனிசாமி தரப்பு மாஜிக்கள் இடையே மோதல்களும் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

பரபர ஆடியோ

பரபர ஆடியோ


அந்த ஆடியோவில், தொண்டர்கள் எல்லாம் இரட்டை இலை பக்கம் இருக்கிறார்கள். தலைவர்கள் பணத்தின் பக்கம் நிற்கிறார்கள். பணத்தைப் பாதுகாக்க, டெல்லியை பிடித்துக்கொண்டு ஆடுகிறார்கள். தங்கமணி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஸ்டாலினிடம் ஓடுகிறார். கே.பி.முனிசாமியும் ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். தளவாய் சுந்தரம் தான் இந்தியாவிலேயே பெரிய புரோக்கர்.

கூட்டத்தையே இழுத்து

கூட்டத்தையே இழுத்து

சி.வி.சண்முகம் பகலிலேயே குடித்துக் கொண்டிருப்பார். அவர் கையில் 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்கள் பின்னால் பழனிசாமி தொங்குகிறார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 42 எம்.எல்.ஏக்களில், ஒன்பது பேர் மட்டுமே ஈபிஎஸ் கையில் உள்ளனர். மீதி பேரை வேலுமணி, தங்கமணி கையில் வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவி வேண்டும் என்பதற்காக, வேலுமணி, தங்கமணி கைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் என பொன்னையன் அந்த ஆடியோவில் மாஜிக்கள் பட்டாளத்தையே இழுத்து விமர்சிப்பதாக இருந்தது.

குழப்பம் ஏற்படுத்திய விவகாரம்

குழப்பம் ஏற்படுத்திய விவகாரம்

இந்த ஆடியோ அரசியல் அரங்கிலும், அதிமுகவிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், விரைவில் இன்னும் பல ஆடியோக்கள் வெளிவரும் என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வந்தனர். ஆனால், அப்படியாக அதன்பிறகு எந்தவொரு ஆடியோவும் வெளியாகவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், பொன்னையன் லேசாக ஓரங்கட்டப்பட்டார். அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகித்த பொன்னையன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக மாற்றப்பட்டார்.

 3 நிமிடம் - எடப்பாடி காலி

3 நிமிடம் - எடப்பாடி காலி

இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நாஞ்சில் கோலப்பன், இன்னொரு ஆடியோவை வெளியிட்டால் எடப்பாடி பழனிசாமியே காலி என பகீர் கிளப்பியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "அதிமுக மூத்த தலைவர் பொன்னையனிடம் நான் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதேபோன்று இன்னொரு ஆடியோ என்னிடம் இருக்கிறது. அந்த மூன்று நிமிட ஆடியோவை வெளியிட்டால் அதிமுகவே இருக்காது.

அதிமுகவே இருக்காது

அதிமுகவே இருக்காது

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போது அதிமுக தொண்டர்களுக்கு என்னென்னெ துரோகங்களைச் செய்திருக்கிறார் என்று பொன்னையன் விளக்கமாகச் சொல்லி இருக்கிறார். அதை வெளியிட்டால் அதிமுகவே இருக்காது என்பதால் அதை கட் செய்து வெளியிட்டேன். இன்று புடம் போட்ட தங்கம் ஓ.பன்னீர்செல்வத்தை தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள். அவர் மீது திருட்டு வழக்கு போடுகிறார்கள். அதனால்தான் இப்போது இதனைச் சொல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். நாஞ்சில் கோலப்பனின் இந்தப் பேச்சு மீண்டும் அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+