அண்ணாமலை பற்றி அப்பவே சொன்னேன் இவர் ஆர்எஸ்எஸ் ட்ரவுசரை உள்ளே அணிந்துள்ளார்னு.. பிரகாஷ் ராஜ்
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறை அதிகாரியாக இருந்த காலத்தில் எப்படிப்பட்டவர் என்பது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும் போது, இவர் ஆர்எஸ்எஸ் ட்ரவுசரை உள்ளே அணிந்துள்ளார் என்று அப்போதே அண்ணாமலை பற்றி கூறினேன் என்றார்.
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாவார். 2011ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர் கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக 2013ல் நியமிக்கப்பட்டார்.கர்நாடகாவின் கார்காலவின் உதவி காவல் கண்காணிப்பாளராக முதல் முதலாக நியமிக்கப்ட்டார்.

அதன்பின்னர், 2015ம் ஆண்டு உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் 2016ம் ஆண்டு சிக்மங்களூருக்கு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.பின்னர் 2018ம் ஆண்டு முல் 2019ம் ஆண்டு வரை தெற்கு பெங்களூரு மாநகர துணை ஆணையராக பணியாற்றினார்.
கர்நாடகாவில் 2013 முதல் 2019ம் ஆண்டு வரை பணியில் இருந்த அண்ணாமலை ஐபிஎஸ், கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு சிறிது காலம் அமைதியாக இருந்தார்.
பின்னர் 2020 ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். 2021 சட்டசபை தேர்தல் பாஜக 4இடங்களில் வெற்றி பெற்றதால், பாஜக மாநில தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.கடந்த 2021ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பணியாற்றி வருகிறார்.
அண்ணாமலைக்கு முன்பு பாஜக மாநில தலைவர்களாக இருந்த தமிழிசை, எல் முருகன் போன்றோரை போன்று இல்லாமல் அதிரடியான அரசியலை செய்து வருகிறார் அண்ணாமலை. ஆளும் கட்சியான திமுகவையும், திமுக அரசையும், அதிமுகவை விட மிக கடுமையாக ஒவ்வொரு பிரச்சனையிலும் விமர்சித்து வருகிறார்.
மறுபக்க்ம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அதிமுகவையும் மறைமுகமாக விமர்சிக்கவும் தயங்கியதில்லை. அதிமுக திமுக இரண்டு கட்சிளையும் விமர்சனம் செய்து வருகிறார். திமுக மற்றும் அதிமுகவினர் பதிலடியும் கொடுத்து வருகிறார்கள். அதேநேரம் அதிமுகவினர் ஒருகட்டத்தில் கோபம் அடைந்து பாஜக கூட்டணியை விட்டே விலகிவிட்டனர்.
இந்நிலையில் அண்ணாமலை குறித்து அண்மையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனியார் ஊடகம் ஒன்றில் பேசுகையில், அண்ணாமலையை நான் பார்த்திருக்கிறேன். சிக்மங்களூருவில் அண்ணாமலை காவல் கண்காணிப்பாளராக இருக்கும் போது, நானும் ஜிக்னேசும் ஒரு மீட்டிங்கிற்கு வந்தோம். ஆனால் இரவோடு இரவாக மீட்டிங்கை கேன்சல் செய்து தெருவில் நின்று பேசினோம். அதற்கு அண்ணாமலை எப்ஐஆர் போட்டுவிட்டு போனார். 2 வருசம் கோர்டில் சுத்தினேன் நான்.. இவர் ஆர்எஸ்எஸ் ட்ரவுசரை உள்ளே அணிந்துள்ளார் என்று அப்போதே அண்ணாமலை பற்றி நான் கூறினேன்.. இப்போது நிரூபணம் ஆகிவிட்டது " என்றார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications