Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“எனக்கு 86 வயசு! எனக்காக, குடும்பத்திற்கான இங்க வரல..!” தாமிரபரணிக்காக நீதிமன்றம் ஏறிய நல்லகண்ணு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தகைசால் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சிந்தனையாளர் நல்லக்கண்ணு இன்று கலமானார். அவருக்கு வயது 101. அவர் மறைந்தாலும் அவர் செய்த பங்களிப்புகள் இளம் அரசியல் தலைவர்களுக்கு ஊக்கமளித்து வருகின்றன. அந்த வகையில், அவர் தனது 86வது வயதில் தாமிரபரணிக்காக நீதிமன்றம் ஏறி வாதாடிய சம்பவம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

2010-2011 காலம் அது. தமிழ்நாட்டில் செழிப்பாக ஓடிக்கொண்டிருந்தது தாமிரபரணி மட்டும்தான். ஆனால், அந்த ஆற்றல் மணல் எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தது.

Nallakannu Tamirabarani legal fight

வேறுபடும் கம்யூனிஸ்ட் தலைவர்கள்

அனுமதிக்கப்பட்ட அளவு 1 மீ. சில இடங்களில் இதை விட அளவு குறையலாம். ஆனால், எந்த இடத்திலும், இதை விட அளவு அதிகரிக்கக்கூடாது என்று சொல்லிதான் அனுமதி கொடுக்கப்பட்டது. அனுமதி கிடைத்தவுடன் ஒப்பந்ததார்கள் மணல் அள்ள ஆற்றில் குதித்தனர். பிரச்சனை என்னவெனில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, மணல் கூடுதலா அள்ளப்பட்டது. சாதாரண மணல்தானங்க.. என்று நாம் கடந்துவிடலாம். ஆனால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் இங்குதான் வேறுபடுகின்றனர்.

வழக்கு விசாரணை

குறிப்பாக நல்லகண்ணுவுக்கு, மணல் அள்ளுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அதனால் இயற்கை எப்படி பாதிக்கப்படுகிறது? என்பதும் நன்றாக தெரிந்திருந்தது. எனவே அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு வயது 86. அவர் தாக்கல் செய்த மனுவை பார்த்து நீதிமன்றமே மிரண்டு போனது. வழக்கு நீதிபதிகள் சுதாகர் மற்றும் கருப்பையா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நதிக்காக போராட வந்த நல்லக்கண்ணு

விசாரணையில், நல்லகண்ணு வைத்த வாதங்களை கேட்டு நீதிபதிகள் வாயடைத்து போயினர். காரணம் அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர். அவரது வாழ்க்கை தாமிரபரணி நதியோடு இணைந்து இருந்தது. இந்த அனுபவங்களை கொண்டு, சரியான தரவுகளுடன் வாதங்களை முன்வைத்தார் நல்லகண்ணு.

மணலை சுரண்டிய ஒப்பந்ததாரர்கள்

"எனக்கு 86 வயதாகிறது. நான் இங்கு தாமிரபரணியை பாதுக்க வந்திருக்கிறேன். எனக்கோ, எனது குடும்பத்திற்கோ இந்த வழக்கால் எந்த பயனும் கிடையாது. இருப்பினும், நதியை பாதுகாக்க வேண்டும் என வந்திருக்கிறேன். மணல் என்பது சாதாரண விஷயம் என்று நினைக்கலாம். ஆனால், அதுதான் நிலத்தடி நீரை சேமித்து வைக்கிறது. பஞ்சு போல மணல் செயல்படுகிறது. நீரை உறிஞ்சி நிலத்தடியில் சேமிக்கிறது. ஆனால், மணலை எடுத்துவிட்டால், அந்த பஞ்சை பிடுங்கி எறிவது போல ஆகும்.

அரசுக்கு அதிகாரம் இல்லை

நீதிமன்றம் அனுமதித்த அளவை விட கூடுதலாக, அதாவது 6 மீ ஆழம் வரை மணல் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆற்றின் தரைத்தளம் பாறையாக மாறிவிட்டது. இனி மழை பெய்தால்கூட ஆற்றில் நீர் இறங்காது, அந்த நீர் அப்படியே கடலில் கலந்துவிடும். இயற்கை வளங்கள் என்பது அரசுக்கு சொந்தமானது கிடையாது. அது மக்களுக்கு சொந்தமானது. அந்த வளங்களை பாதுகாப்பதுதான் அரசின் வேலை. காவலாளி, இயற்கை வளங்களை கொள்ளையடிக்க அனுமதிக்கக்கூடாது.

விவசாயிகளின் வாழ்வாதாரம்

மணல் கொள்யைால் பாலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறிவிட்டன. இப்படி விவசாயிகளை அழித்து ஒப்பந்ததாரர்களை வாழ வைக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பி, இதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அவர் சமர்பித்தார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள அதிரடி தடை வித்தனர். இதனால் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+