கணவர் கொலைக்கு நீதி.. திருவிகநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சபதம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் திரு.வி.க நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளார். கணவரின் கொலைக்கு நீதி வாங்கவே தேர்தலில் போட்டி என்று பொற்கொடி கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட சென்னை மக்களிடம் கடும் கோபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு நீதி கேட்டு அவரின் மனைவி பொற்கொடி போரா வருகிறார். தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

கணவர் கொலைக்கு நீதி
இதுகுறித்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜெய்பீம். தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கினார்கள். திருவிகநகர் தொகுதியை உறுதிபடுத்தியுள்ளனர். அங்கு நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெறுவோம். எடப்பாடி பழனிசாமி ஐயா என்னுடைய கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
சட்டசபையிலும் தொடர்ந்து இதைப்பற்றி பேசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். நான் இங்கு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறும். என்னுடைய கணவரின் கொடூர கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்றார்.
எப்படி எதிர்கொள்ளும் திமுக
வடசென்னையில் செல்வாக்குமிக்க ஆம்ஸ்ட்ராங் மனைவி திருவிகநகர் தொகுதியில் அவரின் மனைவி பொற்கொடி போட்டியிடுவது திமுகவுக்கு கடுமையான போட்டியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு திமுகவினர் பலத்த வியூகங்களுடன் தேர்தல் பணியாற்றி வெற்றி பெற முயற்சி செய்வார்கள். இதனால் திருவிகநகர் தொகுதி தேர்தலில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications